அறிந்து கொள்வோம்நண்பர்களே,;
எல்லோருக்கும் இனிய தைபொங்கல் வாழ்த்துகள். அனைவரும் தேக திட ஆரோக்கியத்துடன் இறை அருளால் இன்பமாக வாழ வாழ்த்துகிறோம். கடவுளை வழிபடுவோம். இவ்வளவு தூரம் கடவுளை வழிபட்டும் கஷ்டங்கள் தருகிறாரே என்று எண்ணி சலிப்படையாதீர்கள் நண்பர்களே.
பருவத்தால் அன்றிப் பழா.” விதை விதைத்த உடனேயே மரம் வந்து விடுகிறதா? இந்த ஜென்மத்துப் பிரயாசையினால் மட்டும் ஆன்மாவை அறிந்துவிட முடியாது. தன்னை அறிகிற நிலை எத்தனையோ பிறவிகளின் முயற்சியினால் வருகிறது. முன்பிறவிகளில் நாம் சேர்த்து வைத்திருக்கிற தவபலம் ஒரு காரணமாக அமையுமே தவிர இப் பிறவியில் நாம் செய்கிற பூஜை புனஸ்காரங்களினால் ஆத்மாவை அறிந்து கொள்ள முடியாது. It takes its own time. அதற்கான பிரயத்தனம்தான் ஆன்மீகம்..லோக சமஸ்தா சுகினோ பவந்து. இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க
Comments by Dr. N. Somash Kurukkal