தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-
நவகிரக ஹோமங்களில்… எருக்கு, பலாசு, கருங்காலி, நாயுருவி, அரசு, அத்தி, வன்னி, அறுகு, தர்ப்பை ஆகியன சூரியன் முதல் கேது வரையிலான நவகிரகங்களுக்கும் சமித்தாகச் செயல்படும். சிந்தில் கொடி, ஆலம் மொட்டு, நெல், எள், பால், ஹவிஸ்ஸு அறுகு ஆகியன மிருத்யுஞ்ஜய ஹோமத்தில் சமித்தாகச் செயல்படும்.
சமித்தைத் தனியாகக் குறிப்பிடாத இடங்களில் அரசு பயன்படுத்தப்படும். எல்லா ஹோமங்களிலும் நெய்யும் ஹவிஸ்ஸும் பயன்படும். அத்துடன் சமித்தைச் சேர்க்கச் சொல்லும் இடங்களில் அரசு அல்லது பலாசு சேர்த்துக்கொள்ளப்படும்.
தர்மசாஸ்திர நூல்களை ஆராய்ந்தால், ஒவ்வொரு ஹோமத்துக்கும் உரிய சமித்தை அறியலாம்.
தகவல்: சேஷாத்திரி நாத சாஸ்திரிகள்.

Comments by Dr. N. Somash Kurukkal