தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
மார்கழி மாத பெருமைகளை அறிவோம்:-
மார்கழி மாதத்திற்கு அப்படி என்ன சிறப்பு?
மனிதர்களாகிய நமக்கு ஒரு வருட காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் கால அளவே ஆகும். இதில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரை தேவர்களுக்கு பகல் பொழுதாக அமைகிற ஆறு மாத காலத்தை உத்தராயணம் என்று அழைக்கிறோம். ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை வருகின்ற ஆறு மாத காலம் தேவர்களுக்கு இரவுப் பொழுதான தட்சிணாயணம். இதன் நிறைவுப் பகுதியான அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையான நேரமே மார்கழி மாதம்.
அதனால் தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள் வண்ணக் கோலமிடுவதை நம் முன்னோர் வழக்கமாகக் கொண்டனர்
Comments by Dr. N. Somash Kurukkal