தெரிந்து கொள்வோம் நண்பர்களே,
அன்பர்கள் பலர் , நவக்கிரக வழிபாடு போல பஞ்ச பூத வழிபாடுகள் என்று ஏதும் உண்டா என்று கேட்டார்கள்.
நண்பர்களே, நவகிரகங்களையும் பஞ்ச பூதங்களையும் ஒரே தரத்தில் வைத்துப் பார்க்காதீர்கள். பஞ்ச பூதங்கள் என்பவை சகலமுமானவை. நீங்கள் எந்த ஜீவராசியை எல்லாம் பார்க்கிறீர்களோ, அவை அனைத்தும் பஞ்ச பூதங்களின் கூட்டு. எனவே, பஞ்ச பூதங்களைத் தனியே பிரார்த்தனை செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
பஞ்ச பூதங்களிலிருந்து வந்தவைதான் கிரகங்கள். அவற்றை ஆராதித்தாலே பஞ்ச பூதத்தை ஆராதித்தது போலத்தான். ‘மண்ணே, உன்னை நான் வணங்குகிறேன்’ என்று சொல்லத் தேவையில்லை.
அதற்குப் பதிலாகத்தான் தாய் நாட்டை வணங்குகிறோம். தண்ணீரே, உன்னை வணங்குகிறேன் என்று சொல்லவேண்டாம். அதற்குத்தான் வருண தேவதை வணக்கம் இருக் கிறது. நெருப்பை வணங்குவதுதான் அக்னி ஸ்தோத்திரம். தனித்தனியே பஞ்ச பூதத்தை ஆராதிக்க வேண்டியதில்லை.
பஞ்ச பூதங்களின் தன்மையை வாங்கிக்கொண்டு சைதன்யத்தோடு இருப்பவற்றை வணங்கினால் போதும்.
Comments by Dr. N. Somash Kurukkal