தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். சக்திதேவி தவமிருந்து சிவனைப் போற்றியதால், அவர் மனம் மகிழ்ந்து இந்த மாதத்தை அம்மனுக்கு உரியதாக்கிக் கொண்டாடப் பணித்தார் என்கின்றன ஞானநூல்கள். மட்டுமன்றி, தட்சிணாயன புண்ணிய காலத்தின் தொடக்கம் ஆடி மாதம். ஆகவே, இந்த மாதத்தில் அம்மனைப் போற்றி வழிபட்டால், பன்மடங்கு பலன்கள் கிடைக்கும்.
நாமும் இந்த ஆடிமாதத்தில் அம்மன் திருத்தலங்களை நாடி தரிசிப்போம். பூரணி, புராந்தகி, புராதனி, சங்கரி, சாம்பவி, சுதந்தரி, சுமங்கலை, நாரணி, த்ரியம்பகி… இப்படி ஆயிரம் ஆயிரம் திருநாமங்களால் போற்றப்படும் மகாசக்தி, ஒவ்வோர் இடத்திலும் ஒவ்வொரு காரணத்துக்காக சிறப்புப் பெயர்கொண்டும், விசேஷ கோலம் கொண்டும் அருள்பாலிக்கிறாள். அப்படியான பெருமை பெற்ற ஆடிமாதத்தில் அம்மனை வழிபட்டு பலன் பெறுவோம்.

Comments by Dr. N. Somash Kurukkal