தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
தாலியில் ஏன் குங்குமம் அணியப்படுகிறது? சாஸ்திரங்கள் சம்பிரதாயங்கள் என்ன சொல்கின்றன? திருமணத்தின் போது குருக்கள் ஐயா சொல்கிறார் நாம் அப்படி செய்கிறோம் என்பதை தாண்டி அதில் உள்ள தத்துவங்களை நன்மைகளை விஷயங்களை தெரிவோம் நண்பர்களே!!!
மஞ்சளில் தயாரிக்கப்படுவது குங்குமம். மஞ்சள் மங்கலப் பொருட்களில் ஒன்று. அதற்கு மருத்துவ குணமும் உண்டு. தங்கமும் மங்கலகரமான பொருளே!
இவை இரண்டையும் தரிப்பது, நித்ய மங்கலத்தை அளிக்கும். மங்கை, மஞ்சள், குங்குமம் ஆகிய மூன்றும் மங்கலத்தை அளிப்பவை.
அம்பாளுக்கு ‘சர்வ மங்களா’ என்ற பெயர் உண்டு. ‘என்றும் மங்கலம் எங்கும் பொங்குக!’ என்று நம்மவர்கள் வேண்டுவர்.
அதன் செயல் வடிவமே, திருமாங்கல்யத்தில் -தாலியில் குங்குமத்தை வைத்தல். தாலி பாக்கியம் கணவனைக் காக்கும் என்பார்கள். அந்தத் தாலி, எப்போதும் மங்களத்துடன் மிளிர வேண்டும் என்ற எண்ணத்தில், குங்குமத்தை அதில் சேர்ப்பது சிறப்பு.
வாழ்நாள் முழுவதும் கணவனுடன் இணைந்து சிறப்பாக நல்ல இல்லறமாக நல்லறத்துடன் குடும்பத்துடன் மகிழ வேண்டும் என்பது அதன் தத்துவம்.
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள மின்இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal