தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
சகஸ்ரலிங்க வழிபாடு!!!
தமிழ் நாட்டில் உள்ள பல ஆலயங்களில் சகஸ்ரலிங்க வழிபாட்டைக் காணலாம்!
ஆனால் இலங்கையில் – ஈழத்தில் சகஸ்ரலிங்க வழிபாடு மிக அரிதாக காணப்படும் இவ்வேளையில் எல்லாம் வல்ல சுன்னாகம் கதிரமலை ஸ்ரீ சொர்ணாம்பிகா சமேத ஸ்ரீ பொன்னம்பலவாணப் பெருமான் ஆலயத்தில் அண்மையில், தனியாக சந்நிதானம் அமைத்து சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அடியார்களின் வழிபாட்டுக்கு வழி செய்யபட்டுள்ளமை அடியார்கள் அனைவர்க்கும் கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதம் மட்டுமல்ல , கதிரமலை சிவனின் மிகப் பெரிய அருளாகும்!!!
1000 லிங்கங்கள் ஒன்று சேர்ந்த ஒரே லிங்க வடிவமே சகஸ்ர லிங்கம் எனப்படும்.
அம்பிகை வேத சக்திகளை ஒன்று கூட்டி வேதநாயகனாக இறைவனை எழுந்தருளச் செய்திருந்தாலும் இந்த வேத சக்திகளை நேரிடையாகப் பெறுதல் மனிதர்களுக்குச் சாத்தியமில்லை. இத்திருக் கோயிலில் பெரிய ஆவுடையுடன் எழுந்தருளியுள்ள இந்த சகஸ்ரலிங்க மூர்த்தி, வேத சக்திகளை மூலவரிடம் இருந்து கிரகித்து பிரபஞ்சம் முழுவதும் வியாபிக்கச் செய்யும் அருட் பணியை மேற்கொள்வார் என்பதில் ஐயமில்லை!!!
ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்தியை வழிபட்டால் ஆயிரம் முறை சிவனை வழிபட்ட பலன் கிட்டும் என்பது உங்களுக்குத் தெரியும் அல்லவா? அப்படி இருக்கும்போது ஒரு முறை சகஸ்ர லிங்க மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால் ஆயிரம் லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்து வழிபட்ட பலன் கிட்டும் அல்லவா?
எனவே இத்தகைய உத்தமமான பலன்களை நல்கும் சகஸ்ர லிங்க மூர்த்திகளுக்கு , மூல மூர்த்தியுடன் சேர்த்து, அபிஷேக ஆராதனைகள் செய்து எம்பெருமானின் பலனைப் பெறுங்கள் நண்பர்களே!!!
தகவல் தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர், www.modernhinduculture.com



Comments by Dr. N. Somash Kurukkal