தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
இறை வழிபாடுகள்!
கடவுளுக்கு பதினாறு விதமான உபசார பூஜைகள் செய்ய வேண்டும். இதற்கு சோடச உபசாரம் என்று பெயர். சோடசம் என்றால் பதினாறு ஆகும். உலகில் உள்ள எல்லா ஆன்மாக்களும், இன்பமாக வாழ்ந்து இறுதியில் முக்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில், ஆகம விதிகளின்படி சோடச உபசார பூஜைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆதிசங்கரர் இந்த பூஜை முறைகளை தனது நூலில் விரிவாக கூறி உள்ளார்!
28 சைவ ஆகமங்களில் இறைவனுக்கான வழிபாடுகள் பல வகைகளாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றை அவரவர் சக்திக்கேற்ப செய்யலாம். அனைத்துக்கும் முக்கியமானது பக்தியே. `ஷோடசோபசாரம்’ என்ற வழிபாட்டு முறை அவற்றில் ஒன்று.
இறைவனே இவ்வுலகைப் படைத்தவர். எப்படி ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதையே அளிக்கிறாளோ, அதுபோல இறைவன் அனைவரின் விருப்பத்துக்கேற்ப அருள்கிறார்.
மேலான இறை அனுபூதியைப் பெறப் பல வழிகள் உண்டு. அவற்றில் ஒன்றான 16 உபசாரங்களின் ஒரு வகையைக் காணலாம்.
1) ஆவாஹனம் 2) ஸ்தாபனம் 3) பாத்யம் 4) ஆசமனீயம் 5) அர்க்கியம் 6) அபிஷேகம், 7) வஸ்திரம், சந்தனம் , புஷ்ப பூஜை 9) தூபம், தீபம் 10) நிவேதனம் 11) பலிதானம் 12) ஹோமம் 13) ஶ்ரீபலிதானம் 14) சங்கீதம், வாத்யம் 15) நிருத்தம் 16) யதாஸ்தானம்.
அன்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள், இந்த சோடச உபசாரங்களை வீட்டிலும் செய்து வழிபடலாமா என்று. ஆம், வீட்டை மிக மிக சுத்தப் படுத்தி வழிபாடு செய்யலாம், ,
`”ஆவாஹனம்து ப்ரதமம்… உத்வாஸம் ஷோடசம் பவேத்”’ என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் யாகம், பலிதானம் போன்றவை வீட்டில் செய்ய முடியாது , அவற்றை தவிர்த்து மற்றவற்றை நம் இல்லத்தில் இருக்கும் இறைவனுக்கு பய பக்தியாக சமர்ப்பித்து வழிபாடு செய்து மகிழலாம். அருளைப் பெறலாம் என்று ஆன்மீக நூல்கள் தெரிவிக்கின்றன!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா, நிறுவன இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com

Comments by Dr. N. Somash Kurukkal