தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
நாதஸ்வரமும், தவிலும் மேலும் பல இசைக்கருவிகள் நம் ஆலயங்களில், திருமணங்களில் , மேலும் பல மங்கல நிகழ்ச்சிகளில் இசைக்கப் படுகிறது! வாத்தியக் கருவிகளை திருமணத்தில் ஏன் இசைக்கிறோம் ?
வாத்தியக் கருவிகள் அனைத்தும் இசைக்கப்படுகின்ற இடத்தைச் சுற்றியுள்ள தீயசக்திகளை விரட்டி, இறை சாந்நித்தியத்தை முழுமையாகக் கொண்டு வர உபயோகப்படுகின்றன.
மேலும், நம் இந்துமத திருமணங்களில் மணமக்களை இறைசக்திகளின் அம்சங்களாகவே பாவிக்கிறார்கள். உதாரணத்திற்கு ‘சீதா கல்யாண வைபோகமே… ராமா கல்யாண வைபோகமே..’, ‘ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே… நம்ம மீனாக்ஷி மணமகள் ஆனாளே…’, ‘மாலை மாற்றினாள்… கோதை மாலை மாற்றினாள்…’ என்று திருமணத்தின்போது பாடப்படுகின்ற பாடல் வரிகளை கேட்டிருப்பீர்கள். திருமணத்தின்போது பாடப்படுகின்ற அனைத்துப் பாடல்களுமே தெய்வத்திருமணத்திற்கான பாடல்களாகத்தான் இருக்கும்.
தெய்வத் திருமணத்திற்கான பாடல்களை பாடும்போது அந்த இறைசக்தியின் அருள் இந்த மணமக்களுக்கும் வந்து சேரட்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற பாடல்களைப் பாடுகிறார்கள். அதேபோல, நீங்கள் குறிப்பிட்டுள்ள வாத்தியக் கருவிகளை இசைக்கும்போது அந்த இடத்தில் ஆண்டவனின் அருள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
ஆலயத்தில் இசைக்கப்படுகின்ற வாத்தியக் கருவிகளை திருமணத்தின் போதும் இசைக்கிறோம். திருமணங்கள் நடைபெறும்போது பிரதானமாக மேள நாதஸ்வரம் ஏன் இசைக்கப் படுகின்றன என்பதை அறிந்து அந்த இசைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்போம்!
Comments by Dr. N. Somash Kurukkal