சிவாச்சாரியார் தீர்த்தம் தரும்போது பலர் வாயினால் உறிஞ்சிக் குடிப்பதை பார்த்திருக்கிறோம். அப்படி எச்சில் பட வாயில் வைத்து தீர்த்தம் குடிக்கப் படாது. வாயில் படாமல் அண்ணாந்து தீர்த்தம் குடிக்க வேண்டும்!
எந்த அளவு சிரத்தையோடு இறைவனின் திருநாமத்தைச் சொல்லி அந்த தீர்த்தத்தை உட்கொள்கிறோம் என்பதும் பிரதானம். அவனது நாமத்தினைச் சொல்லி, அவன் பாதம் சரணடைந்து சிறுதுளி தீர்த்தத்தை உட்கொண்டாலும் அது அமிர்தமாகி நம்மை காக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.
”அகால ம்ருத்யு ஹரணம் (1), ஸர்வ வ்யாதீ நிவாரணம் (2), சமஸ்த பாப சமனம்(3) – மந்த்ர பூதோதக ப்ராஸனம் சுபம்” என்ற மந்திரத்தைச் சொல்லி நீங்கள் குறிப்பிடுகின்ற பூஜிக்கப்பட்ட தீர்த்தத்தினை ப்ராஸனம் செய்ய வேண்டும், அதாவது, உட்கொள்ள வேண்டும். துர்மரணத்திலிருந்தும், அனைத்து விதமான நோய்களிலிருந்தும், செய்த பாபங்களிலிருந்தும் விடுபட இந்த தீர்த்தத்தினை உட்கொள்கிறேன் என்பது இதன் பொருள். ஆகவே நண்பர்களே இந்த தீர்த்தத்தின் முக்கியத்துவம் கருதி கவனமாக செயல்ப் படவேண்டும் சிறு பாராயத்தில் இருந்து பெரியவர்கள் சிறுவர்களுக்கு இவற்றை சொல்லிக் கொடுக்க வேண்டும்!
Comments by Dr. N. Somash Kurukkal