-
தகவல்: செஷாதிரிநாத சாஸ்திரிகள்.
பூராடம் நட்சத்திரத்தைப் ‘பூர்வாஷாடம்’ என்கிறது வேதம். ‘பூராடத்தின் கழுத்தில் நூலாடாது’ என்றொரு சொல்வழக்கு உண்டு. இதற்கு, ‘கழுத்தில் இருக்கும் தாலி நூல் ஆடாது, அறுந்துவிடும்’ எனும் விளக்கம் கொள்ளப்படுகிறது. ஆனால்… ‘ஆடாமல் – அசையாமல் நிலைத்து இருக்கும்’ என்ற பொருளில் வந்தது அந்த வழக்கு.
நட்சத்திரம் ஒருவரை விதவை ஆக்காது. பெண் ஒருத்தி விதவை ஆவதற்குக் காரணம், கணவனது ஆயுளின் குறைவே ஆகும். அதை பூராடம் நிர்ணயிக்காது. கணவனின் ஜாதகமே அவனது ஆயுளை இறுதி செய்யும். அல்ப ஆயுள் உள்ள ஒருவனை மணம் புரிந்தவளுக்கு பூராடம் நட்சத்திரம் இருந்திருக்கலாம். ஆனால், அங்கும் பூராடம் காரணம் இல்லை! காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையே!
உண்மையில் பூராடம் சிறப்புக்கு உரியது. நவராத்திரியில் தேவி பூஜைக்கு உகந்த நட்சத்திரமாக மூலம், பூராடம், உத்திராடம் ஆகியவற்றைச் சொல்கிறது தர்மசாஸ்திரம் (மூலேன ஆவாஹயேத் தேவீம் ச்ரவணேனவிஸர்ஜயேத்). அம்பாள் நித்ய சுமங்கலி. அவளுக்கு ‘சுமங்கலீ’ என்று பெயர் உண்டு என்கிறது புராணம். அந்த நித்ய சுமங்கலிக்கான பூஜைக்கு உகந்த நட்சத்திரங்களில் பூராடமும் அடங்கும். ஆக, ஆடாமல் அசையாமல் என்றைக்கும் சுமங்கலியாக இருக்கும் தகுதியை பூராடம் அளிக்கும் என்கிற விளக்கமே சரியானது.
September 25, 2019
Comments by Dr. N. Somash Kurukkal