நண்பர்களே, சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் என்னகூறுகிறார் என்று பார்போம்:
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தால், புண்ணியம் கிடைக்குமா?
தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் எல்லாம் செய்து கோயிலுக்குச் சென்று பகவானை வழிபடுவது என்று வைத்திருக்கிறோம். வயோதிகத் தாலோ, வியாதியாலோ அப்படி கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதவர்கள், கோயிலிலேயே உயரமான கோபுரத்தைப் பார்த்து, ‘என்னால் கோயிலுக்கு வர இயலவில்லை. நான் ஏற்கெனவே இந்த கோபுரத்தின் கீழ் இருக்கும் பகவானைத் தரிசனம் செய்திருக்கிறேன். கோபுரம் பார்க்கும்போதே எனக்கு பகவானின் நினைவு வருகிறது’ என்று கோபுர தரிசனத்தோடு பகவானின் ஞாபகத்தைச் சிந்தைக்குள் வைப்பவர் களுக்கும், கோயிலுக்குச் சென்று பகவானை வழிபட்ட பலன் கிடைக்கும்.
மற்றபடி, எல்லா வசதிகளும் இருந்தாலும் ‘மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே கோபுரம் தெரிகிறதே… எனக்கு கோடி புண்ணியம்’ என்று எண்ணிக் கொண்டால் அது கோபுர தரிசனம் ஆகாது. கோடி புண்ணியம் அல்ல; ஒரு கோடியில் கொஞ்சம் புண்ணியம் கூடக் கிடைக்காது.
கோபுரத்தைத் தரிசிப்பதே கோடி புண்ணியம் என்றால், உள்ளே இருக்கும் சுவாமியைத் தரிசித் தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி நாம் கோயிலுக்குப் போகவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பழமொழி அது.
Comments by Dr. N. Somash Kurukkal