அறிந்து கொள்வோம் நண்பர்களே:;
மீன் போலப் பார்வையாலேயே ரக்ஷிக்கும் தேவி, மீனாக்ஷி.
தன் முகத்தினுடைய சௌந்தர்யப் பிரவாஹத்தில் ஓடும் மீன்களைப் போல இருக்கும் கண்களை உடையவள்.
”வக்த்ர லக்ஷ்மி பரிவாஹ சலன் மீனாபலோசனா”’
இப்படி லலிதா சஹஸ்ரநாமத்தின் 18ஆவது நாமத்தில் தேவி வர்ணிக்கப்படுகிறாள்.
மீனானது தன் குஞ்சுகளைப் பால் கொடுத்து வளர்ப்பதில்லை என்றும், தன் கண்களால் பார்ப்பதனாலேயே வளர்க்கின்றது என்றும் சொல்வதுண்டு. அதே போல, தேவியானவள் அனைத்து லோகங்களையும் தன் பார்வையினாலேயே ரட்சித்து வருவதால் அவளை மீனாக்ஷி என்று சொல்வது வழக்கம். அதே அர்த்தத்தைத் தரும் மீனாபலோசனா என்ற பெயர் இங்கு குறிப்பிடப்படுகிறது.
– பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெறும் லலிதா சஹஸ்ர நாமம் – 18ஆவது நாமம்.
Comments by Dr. N. Somash Kurukkal