தெரிந்து கொள்வோம் நண்பர்களே!!!
சிவலிங்கத்தத்துவம் பற்றி அறிவோம்!!!
சிவம்’ என்றால் மங்கலம். ‘லிங்கம்’ என்றால் அடையாளம். மங்கல வடிவம் அது. மங்கலம் என்றால் சுபம். சிவத்தை அதாவது சுபத்தை மனதில் இருத்தினால், சித்தம் சிவமாக மாறிவிடும். பிறப்பின் குறிக்கோள் அதுதான். பிறப்பின் முழுமையைச் சிவத்தின் சிந்தனை தந்துவிடுகிறது. ‘நான் உன்னை வணங்குகிறேன் என்று சித்தத்தில் சிவனை இருத்திவிடு; உனது தேவைகள் அத்தனையும் உன்னை வந்தடையும்’ என்கிறது உபநிடதம் (தன்னம இத்யுபாசீத நம்யந்தேஸ்மைகாமா:).
சிவத்தின் இணைப்பால், உமா தேவிக்கு ‘ஸர்வமங்கலா’ என்ற பெயர் கிடைத்தது.
பற்றற்ற நிலை ,. அதற்குத் தியாகம் என்று பொருள். தியாகத்தின் பெருமையைச் சுட்டிக்காட்டுகிறது சிவலிங்கம். பிறக்கும்போது எந்தப் பொருளும் நம்முடன் ஒட்டிக்கொண்டு வருவது இல்லை; இறக்கும்போதும் நம்முடன் சேர்ந்து வருவதில்லை. வாழ்நாளில் ஒட்டாத பொருளை ஒட்டிக்கொண்டு கவலைப் படுகிறோம்!!!
பொருளை உன்னோடு ஒட்டிக்கொள்ளாதே. விட்டுவிடு. என்னைப் பார்… என்னில், எந்தப் பொருளும் ஒட்டுவதில்லை’ என்று சொல்லாமல் சொல்கிறது சிவ லிங்கம். ‘வாழ்க்கையின் முழுமை தியாகத்தில் விளையும்’ என்கிறது உபநிடதம் (த்யாகே நைகே அமிருதத் வமானசு:).
லிங்கத்தில் எதை அர்ப்பணித் தாலும் ஒட்டிக்கொள்ளாது. அபிஷேகத் தண்ணீர் தங்காது; அணிகலன்கள் அணிய இயலாது; வஸ்திரம் உடுத்த இயலாது. அங்க அடையாளங்கள் தென்படாததால், அவன் உருவமற்றவன் என்பதை உணர்த்தும்.
சிவலிங்கம், மௌனமாக மனிதனுக்கு வழிகாட்டுகிறது. அசையாத சிவலிங்கம், உலகை அசையவைத்து இயக்குகிறது. அவன் அசையாமலே உலகம் அசையும்.
நடைமுறையில், நிகழ்வின் நிறைவில் மங்களம் பாடுவோம். மங்கள ஆரத்தி எடுப்போம். கச்சேரியின் முடிவு மங்களம். சுப்ரபாதம் மங்களத்தில் நிறைவுபெறும். பஜனையில் அத்தனை பேருக்கும் மங்களம் பாடுவோம். ஏன்… வெண்திரையில், திரைப்படத்தின் முடிவிலும்கூட, ‘சுபம்’ என்று போடுவார்கள். மங்களம், சுபம், சிவம் அத்தனையும் சிவலிங்கத்தின் நிறைவு.
எங்கும் எதிலிலும் இருப்பது சிவம். அதுதான் சிவலிங்கம். உருவமற்ற பொருள் நமக்காக இறங்கிவந்து சிவலிங்க உருவத் தோடு விளங்குகிறது; அந்தக் கல்லிலும் கருணை தேங்கி இருக்கிறது!!
உலகெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவனை வழிபடுவோம்! சிவலிங்க தத்துவத்தை அறிவோம்! பலனைப் பெறுவோம்!!!
தொகுப்பு:
சுவாமிநாத பஞ்சாட்சர சர்மா , இணையதள ஆன்மீக மின் இதழ் ஆசிரியர். www.modernhinduculture.com
![](https://scontent-lga3-2.xx.fbcdn.net/v/t39.30808-6/448768955_889232873241056_5864856760576742407_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=107&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=LwPce7MTfpcQ7kNvgEsc8mF&_nc_ht=scontent-lga3-2.xx&oh=00_AYANn7z8a5sZMKZ9v1vgwCibmcXmM4Hv0DPiojVXx9-n0w&oe=6680CC21)
![](https://scontent-lga3-1.xx.fbcdn.net/v/t39.30808-6/448755130_889232883241055_6598132237074176219_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=9k-mK6Pt1eIQ7kNvgHrYyD8&_nc_ht=scontent-lga3-1.xx&oh=00_AYCABQ3lcm00e4avjlMSBY2TwQeNUiueWVmjdkqn79FVfQ&oe=6680C8C9)
சிவலிங்கத்தத்துவம் பற்றி அறிவோம்!!!