நண்பர்களே, துளசியின் நன்மைகளை அறிந்து கொள்வோம்.
துளசி, சளியைப் போக்கும் சிறந்த நிவாரணி. மேலும் சிறந்த கிருமிநாசினியான துளசிச் செடியை வளர்ப்பதால், வீட்டைச் சுற்றிலும் உள்ள விஷ ஜந்துகள் மற்றும் கிருமித் தொற்றுகள் வரவு கட்டுப்படும்.
ஆக்சிஜனை அதிகளவில் வெளிவிடும் திறன்கொண்ட துளசிச் செடியால், சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்கும். தினமும் இரவு செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் 10 துளசி இலைகள் போட்டுவைத்து, மறுநாள் காலையில் துளசியை மென்று, அந்த நீரையும் பருகிவர, ஆரோக்கியம் வளரும்.
சரும நோய்களுக்கு மஞ்சள் மற்றும் துளசியை தண்ணீர் சேர்த்து அரைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவிவர… பலன் கிடைக்கும்.
Comments by Dr. N. Somash Kurukkal