தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

இது பலர் அறிந்திராத ஓர் அபூர்வ தகவல். ஆன்மிக மலர் ஒன்றில் இருந்து கிடைத்தது.

தேவலோகத்தில் கற்பக மரம், சந்தனம், அரிசந்தனம், மந்தாரம், பாரிஜாதம் ஆகிய ஐந்து கற்பக தருக்களும் துர்வாச முனிவரின் சாபத்தால் பூவுலகுக்கு வந்து 
நெல்லி மரங்களாக மாறி சிவபெருமானை வழிபட்டன.

இவை ஒவ்வொன்றும் வழிபட்ட ஐந்து தலங்களை பஞ்சகூடபுரம் என அழைக்கிறார்கள். எந்தெந்த தலங்கள்

அவை? திருநாட்டியத்தான்குடி, திருக்காறாயில், திருத்தேங்கூர், திருநமசிவாயபுரம், திருநெல்லிக்கா ஆகிய ஐந்தே அவை.

No photo description available.