தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
தினமும் இறைவனை வழிபடுங்கள் . விளக்கு ஏற்றி வழிபடுங்கள். காலை எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து வழிபடுங்கள்.
மருந்து சாப்பிடுவதற்கான காலத்தை மருத்துவர் சுட்டிக் காட்டுவார். அலுவலகம் வருவதற்குக் குறிப்பிட்ட நேரம் உண்டு. காபி அருந்துவது மற்றும் உணவு உட்கொள்வது ஆகியவற்றுக்கும் நேரம் காலம் ஒதுக்குகிறோம்.
அதிகாலையில் எழுந்து உடலைச் சுத்தம் செய்து விட்டு (நீராடுதல்) விளக்கேற்ற வேண் டும். இந்த விளக்கு, வெளிச்சத்துக்காகவா? வாழ்க்கை ஒளிமயமானதாக விளங்க வேண்டும் என்பதற்காகத்தானே?
ஆதவன் தனது கதிர்களால் உணர்த்தி, நம்மை வேலையில் ஈடுபடத் தூண்டுகிறான். நமது அன்றாடப் பணிகள், விளக்கொளியுடன் ஆரம்பமாக வேண்டும் அல்லவா? வாழ்வின் துவக்கம் இருளாக இருக்க வேண்டுமா என்ன? சிந்தியுங்கள்!
தினமும் இறைவனை வழிபடுங்கள்!