தெரிந்து கொள்வோம் நண்பர்களே:
அட்சய திருதியையின் மகிமையை பார்போம். இன்று அட்சய திருதியை என்றால் எதோ நகைக் கடைக்கு சென்று நகை வாங்கி வங்கிப் பெட்டியில் போட்டு வைக்கும் நாள் என்பது போல மக்கள் பலரின் எண்ணமாகி விட்டது. நகைக் கடைக்காரர்களின் கொண்டாட்ட தினமாகவும் மாறி வருகிறது.
சித்திரை மாதம்- அமா வாசையை அடுத்து வரும் வளர் பிறை திருதியை நாள், ‘அட்சய திரிதியை’ திருநாளாகக் கொண் டாடப்படுகிறது.
வருடத்தில் யுகாதி, விஜய தசமி, தைப்பூசம் ஆகிய நாள் களுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த நாட்களில் யோகம் சரியில்லை என்றாலும், முக்கிய மான காரியங்களைச் செய்ய லாம் என்கின்றன ஞானநூல்கள். இந்தப் பட்டியலில் அட்சய திரிதியையும் அடங்கும்.
தர்மசாஸ்திரப்படி சுப காரியங்கள் அனைத்தையும் வளர்பிறை திதிகளில் ஆரம்பிப் பது விசேஷம். அதிலும் திரிதியை விசேஷமான திதியா கும். இந்தத் திதிநாளில் நட்சத்திரம், யோகம், லக்னம், துருவம் பார்த்து நல்ல நேரத்தில் ஆரம்பிக்கும் காரியம் நிச்சயம் வெற்றி பெறும் என்பார்கள்.
அந்த வகையில் மகா மகா லட்சுமியை வழிபட்டு ஆரம்பிக்கும் எந்த விடயமும் பல்கிப் பெருகும் என்று ஆன்றோர்கள் வாக்கு.
`அட்சய’ என்றால் அழியாத – குறையாமல் பெருகக் கூடியது எனப்பொருள். இந்த நன்னா ளில் செய்யப்படும் நன்மைகள் பன்மடங்காகப் பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும் என்கின்றன ஞானநூல்கள்.
தர்மம் தலைகாக்கும் என்று சொல்வார்கள். மனிதர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறிகளே தர்மம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. மனிதர்களுக்கான அறநெறி களில் குறிப்பிடத்தக்கது தானம். அட்சய திரிதியை நாளில் தான தர்மம் செய்பவர்களுக்குப் பல மடங்கு புண்ணியம் கிடைக்கும்.
நம்மால் முடிந்த சிறிதளவு தர்மம் செய்தாலும் அதற்கான பலன் பலமடங்குக்கிட்டும்.செல்வம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் பெருக இந்நாளில் தானம் செய்வது விசேஷம்.
குறிப்பாக அன்னதானம், சொர்ண தானம், வஸ்திர தானம் செய்வது மிகவும் விசே ஷம். தங்கத்தைத் தானமாகத் தர இயலாதவர்கள் தங்களால் இயன்றளவு பணத்தை அநாதை கள், ஏழைகள், வயோதிகர்கள், ஆதரவு இல்லாத உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்குத் தர்மம் செய்வது விசேஷமாகும்.
நண்பர்களே, நாங்கள் எங்களுக்கு பொருட்களை சேர்க்கும் நாள் என்றில்லாமல் மனமுவந்து அட்ஷய திருதியை அன்று இறைவனை வணங்கி தான தர்மங்கள் செய்து பயன் பெறுவோம்.