தெரிந்து கொள்வோம் நண்பர்களே!
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் `கடலாடும் மாதம்’ என்றும், `தீர்த்தமாடும் மாதம்’ என்றும் சொல்வார்கள். மாசி மாத நாள்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டுவந்தால், எல்லாவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.
விரதம் இருக்க விரும்புபவர்கள், காலையில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, சிவ சிந்தனையுடன் சிவன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்ய வேண்டும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் விரதம் இருந்து பக்தியுடன் கடவுளை தரிசித்துவந்தால் குழந்தைப்பேறு உண்டாகும் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது.
தகவல் சேகரிப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.