அழகுக் கோலங்கள் Print
Written by Dr. Somash   

- திருமதி லக்ஷ்மி சாரதி

தமிழரின் அன்றாட வார்ழ்வின் ஒர் அம்ஸமாக விளங்கும் அழகுக் கலை கோலமாகும். ஏடறியாமலும் எழுத்தறியாமலும் இருந்த நம் முன்னோராகிய தமிழ்பெண்களின் கற்பனைத்திறனையும், கைத்திறனையும் இன்று வரை தொடர்மரபாக விளக்கி வருபவை. தமிழர்; மண்ணின் அழகிய கோலங்;கள், நம் முன்னோர்கள் நமக்கு வழகியிருக்கும் கலைச்செல்வங்கள் கோலங்கள். பண்பாட்டு நாகரீக வளர்ச்சியுடைய சமுதாயத்தில்தான் இத்தகைய அழகிய சித்தரிப்புகள் உருவாகும். முன்னோர், பின்வந்தோர், இன்றுள்ளார் அனைவருமாக உருவாக்கியிருக்கும் இந்த அரிய கலையைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.

18வது நூற்றாண்ழல் வியாசர் எழுதியதாகக் கருதப்படுகின்ற வராக புராணத்தில், வாசல் தெளித்து கோலமிடுதலைப் பற்றிக் கூறியிருக்கிறார். , பகலவன் எழு முன்னும் பொழுது விடியும் முன்னும் வாசலைப் பெருக்கி பசுஞ்சாண நீரால் தெளித்துக் கோலமிடுதலால் இந்தப் பிறவியின் துன்பத்தை நீக்கலாம். வியாசர இதனைத் தனது வராக புராணத்தில் கூறியிருக்கிறார். கோலமிடும் வழக்கம், நமது குடும்பத்தில் வழிவழி வரும் தமிழ்ப்பண்பாட்ழற்கு உரைகல்லாக விளங்குகிறது.

கோலங்கள் என்பது அழகுணர்வு தொடர்பான செய்திகள், போடுபவரின் மன எண்ணங்கள், குடும்பச்சூழல், இல்லத்து நிகழ்வுகள், வாழ்க்கையின் வரிகள். உயிரினத்திற்கு உதவும் பண்பாடு, இயற்கை, தனித்தன்மை பரம்பரை மரபு, ஆகியவற்றைப் புலப்படுத்திக்காட்டும் கண்ணாடியாகத் திகழ்கிறது. பிறப்பு முதல் இறப்பபு வரை போடப்படுகிற கோலங்களுள் சில முரண்பாடுகளைக் காண முடிகிறது. கோலம் என்றாலே அழகு என்று அர்த்தம். அதாவது கலை உணர்ச்சியுடன் நம் உணர்ச்சியை அழகுற வெளிப்படுத்துவது கோலமாகும். வைகுண்டத்தில் திருமகளும் கோலமிடுவதாக வியாசர் தன் வராக புராணத்தில் குறிப்பிடுகிறார்.

கோலமிடுவதால் நல்ல சிந்தனைத் தெளிவும் ஒருமுக நோக்கும், தேக ஆரோக்யமும் கிடைக்கும். இந்த அரிய கலையைப் போற்றிப் பாதுகாக்க வேண்ழயது நமது கடமையாகும். தைப் பொங்கலுக்கு முன்பதாக மார்கழிமாதத்து கோலத்தைக்காண கண் கோடி வேண்டும். இன்று கணினி மூலம் போடும் கோலம் கூட வந்து விட்டது. கணினிக் கோலமும் பார்ப்பதற்கு அழகுதான், ஆனால் மாக்கோலம், அரிசி மாவில் போடும் கோலத்திற்கு இது ஈடாகாது. அரிசிப் பொடியால் தான் கோலம் போட வேண்டும்.

இன்று குழந்தை முதல் வயதானவர்கள் வரை கோலத்தைப் பார்த்தவுடன் தங்களை மறந்து காலை, மாலை வாசலை ரசிப்பார்கள். வாசல் தெளித்து கோலமிடுதல் மரபு, கிராமங்களில் வாசலைப் பசுஞ்சாணம் கலந்து தெளித்துக் கோலமிடுவர். மின் வசதி இல்லாத முற்காலத்தில், பசுஞ்சாணம் தெளித்து கோலமிட்டது பாம்பு போன்ற விஷப் ப+ச்சிகள் உள்ளே வராமல் தடுப்பதற்கே.

முறைவாசல் தெளித்துக் கோலமிடுதல் என்பது வீட்டிற்கு திருமகளை வரவேற்பது போலாகும். காலையில் அக்கோலத்தைப் பார்க்கும் போது மனதிற்கு சந்தோஷமாக இருக்கும். பண்டிகைக் காலங்களில், அதாவது கார்த்திi, தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் வாசலை அடைத்துக் கோலம் போடுவார்கள். இந்த நாட்களில் ரங்;கோலி எனப்படும் கலர்ப்பொடி கொண்டு கோலம் போடுவர். மார்கழி மாதம் 30 நாட்களும் காலையில் பெரிய கோலம் போட்டு கண்ணிற்கும், சிந்தைக்கும் சுவையூட்டுவர். கோலம் போடுவது எறும்பு முதலிய ஜீவராசிகளுக்கும் உணவாகிறது. இவை தேவ தூதர்கள். அதாவது நமக்காக இறைவனிடத்து நல்லது நடக்குமாறு வேண்டுவனவாம்.

வாசலில் கோலம் போடும் போது நல்லவற்றை நினைத்துக் கொண்டு தூய எண்ணத்துடன் போட வேண்டும். கோலத்தை ஒரு போதும் தாண்டக் கூடாது. நாம் போடும் கோங்;கள் நமக்கு வாழ்க்கையில் எல்லாவிதமான நலன்களையும் தருகிறது. தற்காலத்தில் அடுக்கு மாடி வீடுகள் அதிகம் இருப்பதால் வாசலில் இடவசதி குறைவு எனவே ஸ்ரிக்கர் கோலங்கள் பெருகி விட்டன. செம்மண் (காவி) இட்டு கோலம் போடுவதால் த்ருஷ்டி (கண் ஊறு) அகலும். வாசல் படியிலும் கோலம் போடுவது மிகவும் நல்லது. கோலத்தில், மாக்கோலம், நவதான்யக் கோலம், ரங்கோலி (வண்ணப்பொடிக்கோலம்) நீர்க்கோலம் மிகவும் அழகானது. ஓலைக்குடிசையானாலும் சரி, பெரிய வீடானாலும் சரி, அழகான கோலம் போட்டு, குத்து விளக்கேற்றி வைத்தால் அந்த வீட்ழல் திருமகள் குடியிருப்பாள்.

நம் முன்னோர்கள் நமக்களித்த இந்தக் கோலமென்னும் அரிய பொக்கிஷத்தைப் பேணிப் பாதுகாப்பது நம் கடமை. "அஞ்சு வயது மகள் கோலமிட்டால் அழகில்லை என்று அழிக்;கும் தாயாருமுண்டோ" என்று கவிமணி கூறுகிறார். இந்தக் கோலக் கலை மிகவும் பெருமையுடையது. தெய்ங்களொடும், நாட்டோடும் பொருந்திப் போகிறது. இந்த அரிய பொக்கிஷத்தை நினைக்கும் போதெ, தலையில் பூக்களை வைத்தால் மனம் எவ்வளவு சந்தோஷப்படுமோ அப்படி இருக்கிறது. இந்தக் கோலக்கலையை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். உங்கள் மகளை கோலம் போடச் செய்யுங்கள். அவள் கோலப் பொடியுடன் இருக்கும் போது, உங்கள் மனம் சந்தோஷத்தில் துள்ளும்.