சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன? Print E-mail
Wednesday, 06 July 2016 11:12

அறிந்து கொள்வோம் நண்பர்களே:

சிலைகள் கருங்கல்லில் வடிவமைக்கப்படுவதன் காரணம் என்ன
பஞ்சபூதங்களும் கருங்கல்லில் அடங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக்கொள்ளும் தன்மை கருங்கல்லுக்கு உண்டு என்கிறார்கள்.
கல்லுக்குள் நீர் உண்டு. பாறையில் செடிகளும் வளர்வது உண்டு. கற்களை உறசினால் தீப்பற்றிக் கொள்ளும். கல்லுக்குள் காற்றும் உண்டு, அதனால்தான் சில வகையான தவளைகள் கல்லுக்குள் உயிர் வாழ முடியும். ஆகாயத்தை போலவே உலகின் ஒளியையும், ஒலியையும் பெற்றுக்கொள்ளவும், வெளியிடவும் கருங்கல்லால் முடியும். எதிரொலி தோன்றுவதும் கற்களின் மகிமையால்தான்.
இப்படி பஞ்சபூதங்களும் கருங்கல்லில் இருப்பதால்தான், முன்னோர்கள் இதில் சிலை வடித்திருக்கிறார்கள்.:- prepared  by panchadcharan swaminathasarma

 
தாமரை மலரின் பெருமை: Print E-mail
Wednesday, 06 July 2016 11:14

நண்பர்களே அறிந்து கொள்வோம்!

வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ.

 
நந்தி தேவர் வழிபாட்டை பார்போம், Print E-mail
Wednesday, 06 July 2016 11:16

நண்பர்களே, பலவழிபாட்டு முறைகளை நாம் இங்கு பல பதிவுகளிலும் பார்த்திருக்கிறோம். இன்று நந்தி தேவர் வழிபாட்டை பார்போம், தெரிவோம்.

தானும் நந்தியும் வேறல்ல, ஒருவரே என்று சிவபெருமான் நந்தி புராணத்தில் கூறுகிறார். நந்தியைத் தொழுவது சிவபெருமானைத் தொழுவதே ஆகும். `நந்தி' என்ற சொல்லுக்கு ஆனந்தமாக இருப்பவன் என்று பொருள். பிறரை ஆனந்தப்படுத்துபவன் என்றும் பொருள் கொள்ளலாம். `நந்தி' என்ற வார்த்தையுடன் `ஆ' சேரும்போது `ஆநந்தி' என்ற பொருள் தருகிறது.

`நீயும் ஆனந்தமாக இரு, பிறரையும் ஆனந்தமாக வைத்திரு! என்று சிவபெருமான் நந்திக்கு அளித்த வரம் அது. ஆக, நந்தியம் பெருமான் தன்னை வணங்குபவர்க்கு ஆனந்தத்தைத் தருபவர் ஆவார். நந்தியைத் தொழாமல் சிவபெருமானைத் தொழ முடியாது. ஆலயத்தில் நந்தியை மட்டுமே தொழுதுவிட்டு திரும்பி விட்டால் கூட சிவபெருமானை வணங்கியதன் முழுபலனும் கிட்டும்.சிவபெருமான் இடத்தில் இருந்து சிவாகமங்களைத் தெளிந்து நமக்கு அருளினார் நந்திதேவர். ஆதலால் சைவ சமயத்திற்கு முதல் குருவாக விளங்குகிறார். நந்திக்கு `அதிகாரநந்தி' என்ற பெயரும் உண்டு. இந்த பிரபஞ்சத்தின் நாயகனான சிவபெருமான் நந்திக்கு அத்தனை அதிகாரங்களையும் வழங்கியுள்ளார்.

ஆலயங்களை காவல் காக்கும் அதிகாரமும் நந்திக்கே உரியது. இதன் அடையாளமாகத்தான் கோவில்களில் சுற்று சுவர்களில் நந்தியின் உருவை அமைத்துள்ளார். நந்திதேவர் சித்தர்கள், முனிவர்க்கெல்லாம் முதல் குருவாக விளங்குகிறார். சிவ, சக்தி இருவர் முன்னிலையிலும் இருப்பவர் நந்திதேவர், சிவபெருமானின் முக்கண்ணின் பார்வைக்கு எதிரில் நிற்க நந்திதேவரைத் தவிர வேறு யாராலும் இயலாது.

இது சிவபெருமானே நந்தி தேவருக்கு அளித்த வரமாகும். நந்திதேவரின் உத்தரவு பெற்ற பின்பே, சிவபெருமானின் ஆலயத்தினுள் நாம் பிரவேசிக்க வேண்டும் என்கிறது வேதம். சிவபெருமான் ஒரு தடவை நாரதரிடம் நான் விரைவில் பூலோகம் செல்வேன்.

தர்மத்தைக் காத்து மீண்டும் சைவம் தழைக்கச் செய்வேன். நான் வரும் வரையில் கயிலாயத்தில் நந்தி தேவன் எனது இடத்தில் இருப்பான் என்றார். அனைவரின் முகத்திலும் ஆச்சரியம் விரிந்தது. அதைப் புரிந்து கொண்ட சிவபெருமான், நந்திதேவன் பக்தியில் என்னைப் போன்றவன். ஆதியில் அவதரித்தவன்.நானே நந்திதேவன். நந்தி தர்மமே வடிவானவன். சிவாய நம என்ற பஞ்சாட்ச மந்திரத்தின் உருவகம் நந்தி தேவனே.

நந்திதேவனை வழிபடுபவர்களுக்குச் சிறந்த பக்தியும், நற்குணங்களுடைய குழந்தைச், செல்வங்களும், சகல காரிய சித்தியும் உயர்ந்த பதவிகளும், நல்ல எண்ணங்களும், நல்லொழுக்கமும் கிடைக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக முக்தியெனும் வீடுபேற்றையும் அவர்கள் அடைவர் என்று நந்திதேவரின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சிவபெருமான். 
சிவபெருமான் தனக்கு இணையாக நந்திதேவரைக் கூறி உள்ளதால் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் நந்தி தேவரை வணங்க வேண்டும். அதனால், தன்னை வணங்குபவருக்கு மட்டுமல்ல, நந்திதேவரை வணங்கியவருக்கும் மோட்ச சுகத்தையும் மக்கட் பேற்றையும், பக்தியையும், ஊக்கத்தையும், காரிய சித்தியையும், எல்லா வரங்களையும் அளித்து வருகிறார் சிவபெருமான்:- prepared by panchadcharan swaminathasarma

 
எங்களை வாழ வைக்கும்இறைவனை நன்றியுடன் வணங்குவோம். Print E-mail
Wednesday, 06 July 2016 11:15

நண்பர்களே எங்களை வாழ வைக்கும்இறைவனை நன்றியுடன் வணங்குவோம்.

புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது. இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்குத் தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல் இறைவன்.

ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு நன்றிக் கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.

இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.

இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு:- தொகுப்பு -பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

 
கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால்................... Print E-mail
Wednesday, 06 July 2016 11:19

நண்பர்களே, சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் என்னகூறுகிறார் என்று பார்போம்:

கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிறார் கள். ஆனால் இதைச் சுட்டிக்காட்டி கோயிலுக்கு நேரடியாகப் போகாமல், கோபுரத்தை மட்டுமே தரிசித்துக் கொண்டிருந்தால், புண்ணியம் கிடைக்குமா?

தினமும் காலையில் எழுந்ததும் ஸ்நானம் எல்லாம் செய்து கோயிலுக்குச் சென்று பகவானை வழிபடுவது என்று வைத்திருக்கிறோம். வயோதிகத் தாலோ, வியாதியாலோ அப்படி கோயிலுக்குச் சென்று பகவானைத் தரிசிக்க முடியாதவர்கள், கோயிலிலேயே உயரமான கோபுரத்தைப் பார்த்து, ‘என்னால் கோயிலுக்கு வர இயலவில்லை. நான் ஏற்கெனவே இந்த கோபுரத்தின் கீழ் இருக்கும் பகவானைத் தரிசனம் செய்திருக்கிறேன். கோபுரம் பார்க்கும்போதே எனக்கு பகவானின் நினைவு வருகிறது’ என்று கோபுர தரிசனத்தோடு பகவானின் ஞாபகத்தைச் சிந்தைக்குள் வைப்பவர் களுக்கும், கோயிலுக்குச் சென்று பகவானை வழிபட்ட பலன் கிடைக்கும்.
மற்றபடி, எல்லா வசதிகளும் இருந்தாலும் ‘மொட்டை மாடியிலிருந்து பார்த்தாலே கோபுரம் தெரிகிறதே... எனக்கு கோடி புண்ணியம்’ என்று எண்ணிக் கொண்டால் அது கோபுர தரிசனம் ஆகாது. கோடி புண்ணியம் அல்ல; ஒரு கோடியில் கொஞ்சம் புண்ணியம் கூடக் கிடைக்காது.

கோபுரத்தைத் தரிசிப்பதே கோடி புண்ணியம் என்றால், உள்ளே இருக்கும் சுவாமியைத் தரிசித் தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் என்று எண்ணி நாம் கோயிலுக்குப் போகவேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட பழமொழி அது.:- prepared by panchadcharan swaminathasarma

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 9 of 39