ஏன் ''உப நயனம்'' என்கிறோம்?...... Print E-mail
Wednesday, 06 July 2016 11:07

நண்பர்களே, உபநயனம்என்று சொல்கிறோம். பூணுல் போடுகிறோம் என்று சொல்கிறோம். பிராமண சிறார்களை நல்வழிப்படுத்த உபநயனம் பிரதானமாகிறது ஏன் ''உப நயனம்'' என்கிறோம்?

உபநயனம் என்றால் என்ன? ‘நயனம்’ என்றால் ‘அழைத்துப் போவது’. கண்ணில்லாதவனை இன்னொருத்தன்தான் அழைத்துப்போக வேண்டியிருக்கிறது. இதிலிருந்து கண்தான் நம்மை அழைத்துப் போகிற தென்று தெரிகிறது. எனவேதான் அதற்கு நயனம் என்று பேர். ‘உப’ என்றால் ‘ஸமீபத்தில்’ என்று ஒரு அர்த்தம். ‘உபநயனம்’ என்றால் ‘ஸமீபத்தில் அழைத்துப் போகிறது’. எதற்கு, அல்லது யாருக்கு ஸமீபத்தில்? குருவுக்கு ஸமீபத்தில்தான்.

இதுவரை குழந்தையாக மனம் போனபடி விளையாடிக் கொண்டு இருந்தவன் இப்போதுதான் ஒரு பொறுப்போடு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதான ஒரு ஆச்ரமத்தை ஏற்கிறான். இங்கே ஆச்ரமம் என்றால் பர்ணசாலை என்று அர்த்தமில்லை. வாழ்க்கையில் ஒரு நிலை என்று Stage of life என்று அர்த்தம். இந்த முதல் ஆச்ரமத்துக்கு பிரம்மசர்ய ஆச்ரமம் என்று பெயர். இங்கே குருதான் முக்கியம்.

--ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்:  prepared by  panchadcharan swaminathasarma

 
குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ? Print E-mail
Wednesday, 06 July 2016 11:05

குழந்தை இல்லையா? நேர்வகிடு எடுங்கோ?

(பெண்களுக்கும் பெற்றோர்களுக்கும் கொடுத்த ஒரு அறிவுரை)

ஒரு சமயம், காஞ்சிப்பெரியவர் பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். வரிசையில் நின்ற தம்பதி ஒரு தட்டில் பூ, பழம், கல்கண்டு கொடுத்து அவரை வணங்கினர்.

திருமணமாகி ஏழு ஆண்டாகியும் குழந்தைப் பேறு இல்லாததைச் சொல்லி வருந்தினர்.

பெரியவர், ஒரு கணம் அந்த பெண்ணின் முகத்தை உற்றுப் பார்த்து, ""எத்தனை வருஷமா கோணல் வகிடு எடுத்து தலைவாருகிறாய்?'' என்று கேட்டார்.

அந்த பெண்ணோ, நினைவு தெரிந்த நாளாக இப்படியே தலை சீவுவதாக தெரிவித்தாள்.""இன்று முதல் நேர் வகிடு எடுத்துக்கோ! அப்படியே தலை வாரி, அதில் குங்குமம் இட்டுக் கொள். சவுந்தர்ய லஹரி, ஆதித்ய ஹ்ருதயம், அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் இரண்டு மாதம் படித்து வா'' என்று சொல்லி ஆசியளித்தார்.

பெரியவர் கூறியபடியே அந்த பெண்ணும் செய்து வந்தாள். பெரியவரிடம் ஆசி பெற்று சென்ற, 51வது நாளில், மருத்துவரிடம் சோதித்தபோது, அவள் தாய்மை அடைந்தது உறுதியானது.

பெண்குழந்தை பிறந்தது. குழந்தையை மடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் ஆசி பெற்றனர்.

நன்றி: வரகூரான் நாராயணன்.:  prepared by panchadcharan swaminathasarma

 
''ஆனிமாதமும் ஆடல் வல்லானும்! Print E-mail
Wednesday, 06 July 2016 10:58

நண்பர்களே, ஆனி மாத சிறப்புகள் பற்றி அறிவோம்!

''ஆனிமாதமும் ஆடல் வல்லானும்!

ஆ டல் வல்லான், திருக்கூத் தன், தில்லையுட் கூத்தன் எனப் பல விதமான திருநாமங்களில் சிதம்பரம் நடராஜரை பக்தர்கள் அழைப்பார்கள்.

சைவத்தில் பொதுவாக ‘கோயில்’ என்று சொன்னாலே அது சிதம்பரத்தைத்தான் குறிக்கும். அதனால்தான் சிதம்பர மகாத்மியத்தைக் கூறும் நூல் ஒன்று ‘கோவில் புராணம்’ என்றே அழைக்கப்படுகிறது. சிதம்பரத்துக்கும் ஆனி மாதத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சிதம்பரத்தில் நடராஜப் பெருமானுக்கு, வருடத்தில் இரண்டு பிரம்மோற்சவம் நடை பெறுகிறது.முதலாவது, ஆனி மாதம் உத்திரம் நட்சத்திரத்துக்குப் பத்து நாட்கள் முன்னதாகக் கொடியேற்றுவர். முதல் நாளில் இருந்து எட் டாம் நாள் திருவிழா வரை ஸ்ரீசோமாஸ்கந்தர், ஸ்ரீசிவா னந்த நாயகி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண் டேஸ்வரர் ஆகிய பஞ்ச (உற்சவ) மூர்த்திகளும் ஒவ் வொரு நாளும் திருவீதி உலா வருவார்கள்.ஒன்பதாம் நாள் தேர்த் திரு விழா. அன்று மூலவரான ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளும் தேர்களில் திரு வீதியுலா வருவார்கள்.

ஸ்ரீநடராஜர், ஸ்ரீசிவகாமி அம்பாள் இருவரையும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து காலையில் சூரிய உதயத்துக்கு முன் அபிஷேகம் செய்து மறுபடியும் திருவாபரணங்களைச் சார்த்தி அர்ச்சனை, பூஜை ஆகியவற்றைச் செய்வார்கள்.பகல் ஒரு மணியளவில் ஸ்வாமி யையும் அம்பாளை யும் ஆனந்த நடனம் ஆடச் செய்வர்.

பின்பு சித்சபா பிர வேசத்துடன் தீபாராதனை நடைபெறும். இப்படி எல்லாம் முடிந்து பத்தாம் நாள் கொடி இறக்கும் வரை நடப்பதே பிரம்மோற்சவம்.

மறு நாள் விடையாற்றி உற்சவமும் நடைபெறும். இரண்டாவது பிரம் மோற்சவம் மார்கழியில் நடைபெறும்.--prepared by panchadcharan swaminathasarma

 
அறிவோம் நண்பர்களே ஆனி மாத சிறப்புக்களை: Print E-mail
Wednesday, 06 July 2016 11:00

அறிவோம் நண்பர்களே ஆனி மாத சிறப்புக்களை:

உலகெங்கிலும் வாழும் இந்துப் பெரு மக்களுக்கெல்லாம் மூலப்பரம் பொருளாக இருந்து இந்த உலகையும் மக்களையும் காத்து வருகின்ற சிவனுக்குகந்த நாட்களில் ஒன்றாக ஆனி உத்தரம், ஆனி திரு மஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் தரிசனம் என்பன அமையப்பெற்ற ஒரு நன்னாள் ஆகும்.இதில் ஆனி மாதம் ஷஷ்டி திதியும் சேர்ந்த ஆனி உத்தர தரிசனம் மிக சிறப்பு வாய்ந்தது என ஆகமங்களில் தெளிவாக கூறப்பட்டிருக்கின்றது. முருகன் அலங்காரப் பிரியன் என்பது போல் சிவன் அபிஷேகப் பிரியன் ஆவார்.

நாம் சிவபெருமானது திருவருளைப்பெற அவரது மனம் குளிரத்தக்கதாக அபிஷே கங்களை சிவாலயங்களில் செய்ய வேண்டும். இவற்றுடன் வருடத்தில் சிவனுக்கு அபிஷேக தினங்களாகவும் தரிசன காட்சியாகவும் உள்ள தினங்களில் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்யவேண்டும். இதனால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகல பாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழலாம் என புராணங்கள் எமக்கு எடுத்துக் கூறுகின்றன.; தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

 
ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்: Print E-mail
Wednesday, 06 July 2016 10:55

ஆரோக்கியம் வளர... ஆயுள் அதிகரிக்க... மிருத்யுஞ்சய மந்திரம்:

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்! ‘சதமானம் பவதி சதாயு புருஷ: அதாவது நோய் இல்லாமல் 100 ஆண்டுகள் வாழ்வதே சிறந்தது’ என்றுதான் வேதமும் சொல்கிறது. மனித சரீரத்துக்கு பலவிதமான வியாதிகள் ஏற்படுகின்றன. உடல் உபாதைகள், பிறவியிலேயே ஏற்பட்ட ரோகங்கள், மற்றவர்களால் ஏற்படக்கூடிய தொற்றுநோய்கள், நீண்டகாலம் உள்ளேயே இருந்து முற்றிய நிலையில் வெளிப்படும் நோய்கள் எனப் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த ரோகங்கள்எல்லாம், ‘ஜன்மாந்தர கிருதம் பாபம் வ்யாதிரூபேண ஜாயதே தச்சாந்தி: ஔஷதய்: தானை: ஜப ஹோம அர்ச்சனாதிபி:’ முன் ஜன்ம பாவங்களின் விளைவாகவே மனிதர்களுக்கு வியாதிகள் ஏற்படுகின்றன என்றும், அவற்றிலிருந்து நிவாரணம் பெற மருந்தை உட்கொள்வது மட்டுமல்லாமல், ஜப, ஹோம, பூஜைகளையும் செய்யவேண்டும் என்றும் யோகரத்னாகரம் என்ற ஆயுர்வேத நூல் கூறுகிறது.பூர்வஜன்ம வினைப்பயனாக நமக்கு ஏற்படக்கூடிய சகல விதமான ரோகங்களில் இருந்து விடுபடவும், நோய் இல்லாமல் வாழவும் வேதங்கள் அருளிய அற்புதமான மந்திரம் மகா மிருத்யுஞ்சய மந்திரம். மிருத்யுஞ்சய என்றால், மிருத்யு என்ற யமனை ஜெயிப்பது என்று பொருள். ‘மிருத்யோர் மிருத்யு’ என்று போற்றப்பெறும் பரமேஸ்வரனிடம், மரண பயத்தை நீக்கவும், ஆயுள் விருத்திக்காகவும் பிரார்த்திக்கும் மந்திரமே மகா மிருத்யுஞ்சய மந்திரம். பொதுவாக, எல்லாவிதமான நோய்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து விடுபடுவதற்கு சப்த திரவிய மகா மிருத்யுஞ்சய மந்திரம் சிறந்தது என்று பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரம் என்ற முப்பெரும் ஜோதிட நூல் கூறுகிறது.

மகா மிருத்யுஞ்சய ஹோமம் என்பது 21 மந்திரங்கள் கொண்டது. அது வேதவிற்பன்னர்களால் செய்யப்படுவது. இருப் பினும், அவற்றுள் சிறந்த மந்திரமாக இருப்பது 'த்ரயம் பக' மந்திரம் ஆகும்.மந்திரம்:

''ஓம் த்ரியம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உருவாருஹமிவ பந்தனாத் ம்ருத்யோர் முச்சீய மாம்ருதாத்''

இந்த மந்திரத்தின் ரிஷி: ககோள ரிஷி; சந்தஸ்: அனுஷ்டுப்; தேவதை: அம்ருத ம்ருத்யுஞ்சய ருத்ரர்; பீஜ மந்திரம்: சாம் சீம் சூம் சைம் சௌம் ச:

மந்திரத்தை ஜபிப் பதற்கு முன்பாகச் சொல்ல வேண்டிய தியான ஸ்லோ கத்தின் பொருள்:

‘பார்ப்பதற்கு நளினமாக இருப்பவரும், தலையில் ரேகையாக கங்கையை உடையவரும், அழகான கழுத்தை உடையவரும், சூரியன், சந்திரன், அக்னியைக் கண்களாகக் கொண்டவரும், நான்கு கரங்களில் அபயம், பாசம், வேதங்கள் மற்றும் ஸ்படிகத்தாலும் வெண் முத்துக்களாலும் ஆன அட்சமாலை ஆகியவற்றை ஏந்தியவரும், சுபம் தரக்கூடிய வெண்மை நிறத்தவராகவும் விளங்கும் பரமேஸ்வரனை வணங்குகிறேன்!’

இப்படிப் பரமேஸ்வரனை தியானித்துவிட்டு, த்ரயம்பக மந்திரத்தை ஜபித்தால், நோய் இல்லாமல் நூறு வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.

இந்த மிருத்யுஞ்சய ஹோமத்தில் அருகம்புல், சீந்தில்கொடி, சமித்து, அன்னம், நெய், பால், நெல் ஆகிய 7 திரவியங்கள் பிரதானமாக இடம்பெறுகின்றன. சீந்தில்கொடி அதிக மருத்துவ குணம் கொண்டது. கேன்சரையும் குணப்படுத்தவல்லது. அருகம்புல் ரத்தத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. 
- நன்றி:வித்யாவாரிதி சுப்ரமண்ய சாஸ்திரிகள்:  prepared by panchadcharan swaminathasarma

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 8 of 39