காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?. Print E-mail
Sunday, 23 July 2017 14:12

ஆன்மிக மலர் ஒன்றிலிருந்து:--

கடவுள் மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்துவிட காரணம் தெரியுமா?..திருப்பாற் கடலில் வீற்றிருக்கும் மகா விஷ்ணுவின் காலை அவரது மனைவி மகாலட்சுமி பிடித்து விடுவது போன்று பல்வேறு கோவில்களில் சிற்பங்கள் மற்றும் உருவப் படங்களை நாம் பார்த்திருப்போம் அல்லவா?

மகா விஷ்ணுவின் காலை மகாலட்சுமி பிடித்து இருப்பது போல இருப்பதற்கு என்ன காரணம் நீங்கள் யோசித்தது உண்டா? மகாவிஷ்ணுவும், லட்சுமி தேவியும் அன்பான ஒரு சிறந்த தம்பதிகள்.

அதாவது கணவனின் காலை மனைவி பிடித்து விட்டால் அவர்களின் குடும்பத்தில் சொத்துக்கள், செல்வங்கள் வந்து சேரும் என்பது உண்மை என்று கூறுகின்றார்கள்.

 

ஆண்களின் முட்டி பாகம் முதல் பாதத்திற்கு முன்பாக உள்ள கணுக்கால் வரை உள்ள பகுதி சனிகிரகத்தின் ஆளுமைக்கு கீழ் வருகின்றது. அதே சமயம் பெண்களின் கை பாகத்தை சுக்கிரனின் ஆளுகைக்கு உட்பட்டதாக முன்னோர் ஜோதிட ரீதியாக கூறியுள்ளார்கள்.
ஆண்களின் முட்டி பாகம் முதல் கணுக்கால் வரை உள்ள பகுதி மட்டும் சனிகிரகத்தின் ஆளுமைக்கு உட்பட்டிருப்பதால், இந்த பகுதியில் பெண் என்ற சுக்கிரனின் கைகள் பட ஆணுக்கு பணம் சிறிது சிறிதாக வந்து சேரும்.

 

இதனால் தான் செல்வத்திற்கு அதிபதிகளான லட்சுமி தேவி மகாவிஷ்ணுவின் கால்களை பிடித்து விடுவதாக சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் வரைந்து வைத்துள்ளனர் என்று நமது முன்னோர்கள் கூறுகின்றார்கள்.  prepared by panchadcharan swaminathasarma

Read more...
 
ஆனித் திருமஞ்சணம் Print E-mail
Sunday, 23 July 2017 14:11

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

ஆனி - ஆனித் திருமஞ்சணம்

ஆனி மாதத்தில் பவுர்ணமி கேட்டை நட்சத்திரத்தில் வரும். சிவன் கோயில்களில் சிவனுக்கு முக்கனிகளால் (மா, பலா, வாழை) அபிஷேகம் செய்வார்கள். ஆனி மாதத்தில் சிவபெருமான், பார்வதியின் அருளைப் பெற வழிவகுக்கும் நாளாகும். சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனித் திரு மஞ்சனத் திருவிழா இந்த நாளில் மிக சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனி மாதம் பவுர்ணமியன்று காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனித் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

 
ஆன்மிகம்: Print E-mail
Sunday, 23 July 2017 14:07

இன்றைய சிந்தனை:-

ஆன்மிகம்:
ஆன்மாவை உணர வேண்டுமானால்.....
"மனிதர்களுக்குக் கண், காது, மூக்கு, பல் என அழகான உறுப்புகள் அமைந்திருந்தாலும் ஒரு புகைப்படம் எடுத்து அந்தப் படத்தைப் பார்த்துத்தான் ரசிக்க முடிகிறது.அதுபோல் உன் உள்ளே ஆன்மா என ஒன்று இருந்தாலும் உள்ளத்திலிருந்து வெளிப்படும் உணர்வுகளால்தான் அதனை உணர முடியும்.

கல்லுக்குள் ஈரம் இருப்பதுபோல, உங்கள் உள்ளத்திற்குள் வளர்ச்சி இருக்க வேண்டும். உழைக்க வேண்டும், மற்றவர்கட்குக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும். மற்றவனைக் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் வரக்கூடாது."

 
பன்னிரண்டு பவுர்ணமிகளுமே ............................... Print E-mail
Sunday, 23 July 2017 14:08

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:-

இந்துக்களாகிய நாம் எல்லோரும் வருடம் முழுவதும் மாதா மாதம் ஏதாவது ஒன்று அல்லது அதற்கு மேலும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்தப் பண்டிகை நாட்களைக் கூர்ந்து கவனித்தால் பெரும்பாலும் அமாவாசையும் பவுர்ணமியும் பங்கு வகிக்கின்றன. இந்த இரண்டு நாட்களையும் நம் முன்னோர்கள் புனித நாட்களாகக் கருதி அந்த நாட்களில் இறைவனிடம் மனதை செலுத்த விரத நாட்களாகவும் ஆக்கினார்கள். அப்படி விரதம் இருக்க வேண்டுமானால் நம் உடலில் பலமும், மனதில் சக்தியும் வேண்டும். விஞ்ஞானபூர்வமாக பார்த்தால் அமாவாசை அன்று பூமி, சூரியன், சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில் வருவதால் அந்த நாளில் பூமியின் ஆகர்ஷண சக்தி அதிகமாக இருக்கும் அமாவாசைக்குப் பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து பவுர்ணமி அன்று அழகிய முழுநிலவு வானில் தோன்றும். அன்று பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும்.

 

அன்று மனித உடலுக்கு சக்தி அதிகமாக இருக்கும். பவுர்ணமி அன்று கடலுக்கும் சக்தி அதிகமாகி கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக பொங்குவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம்.

விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லாமல் ஆன்மிக ரீதியாகவும் பவுர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்த முக்கிய நாளாகக் கருதப்படுவதால் மாதாமாதம் ஒவ்வொரு பவுர்ணமியையும் ஒரு பண்டிகையாகக் கொண்டாடும்படி நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள். மாதா மாதம் பவுர்ணமி ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்திலேயே வரும், அந்த நாட்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் பெரும்பாலும் அந்த நட்சத்திரத்தின் பெயரிலேயே வருவதைக் காணலாம். மேலும், தட்சனது சாபத்தால் சிவபெருமானிடம் அடைக்கலம் வேண்டினார் சந்திரன். சந்திரனுக்கு அடைக்கலம் அளித்த சிவபெருமான் அதை தன் தலையில் சூடிக்கொண்டு சந்திரசேகரர் ஆனார். ஆதலால் பன்னிரண்டு பவுர்ணமிகளுமே சிவபெருமானுக்குரிய விசேட நாட்களாகும்.

 

prepared by panchadcharan swaminathasarma

 
பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி! Print E-mail
Sunday, 19 June 2016 12:17

மருத்துவக் குறிப்பு: அறிந்துகொள்வோம் நண்பர்களே:

பிளட் பிரஷரை குறைக்கும் தர்பூசணி!
அரிசி, சர்க்கரை, உப்பு உள்ளிட்ட வெள்ளை நிறத்திலான உணவுகள் பலவற்றை உடலுக்குக்குக் கெடுதல் என்பார்கள். ஆனால், வெள்ளைப் பூசணிக்காய்க்கு நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன. இதேபோல் தர்பூசணியில் சிவந்த சதைப்பாகம் மட்டுமல்லாது தோலை ஒட்டியிருக்கும் வெள்ளை நிற சதைப்பாகத்துக்கும் நிறைய மருத்துவக் குணங்கள் உள்ளன.

வெள்ளைப் பூசணிக்காயை ஜூஸாக்கி வெல்லம்,ஏலக்காய்த்தூள் சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தீராத வயிற்றுப்புண் தீரும். அதுமட்டுமல்லாமல், பெண்களின் வெள்ளைப்போக்கு, ரத்தம் - சீழுடன் சிறுநீர் வெளியேறுதல் போன்ற வியாதிகளையும் இந்த பூசணிக்காய் ஜூஸ் குணப்படுத்தும்.

தர்பூசணியின் வெள்ளை நிற சதைப்பாகம் ஆண்மை சக்தியை அதிகரிக்கும் வல்லமை படைத்தது. மேலும், உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்கக்கூடியது. ரத்தக்குழாய்களில் படியக்கூடிய கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்யும். உயர் ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்தி ரத்த ஓட்டத்தை சீராக்கக்கூடிய தன்மை கொண்டது. மற்ற பழங்களில் இல்லாத சத்துகள் பலவும் தர்பூசணியில் உள்ளன. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், சுறுசுறுப்பாக இயங்கவும் உதவுக்கூடியது தர்பூசணி.:: தகவல் தொகுத்தவர்:பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.

 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 4 of 39