மருத்துவக் குறிப்பு:- Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, இது மருத்துவக் குறிப்பு:-

முருங்கைக் காயை ‘ஊட்டச்சத்துகளின் பெட்டகம்’ என்றே சொல்லலாம். முருங்கை காயில் பாலில் உள்ளதைப் போல நாலு மடங்கு கல்சியம், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல ஏழு மடங்கு வைட்டமின் சி , கீரையில் உள்ளதைப் போல இரண்டு மடங்கு இரும்புச் சத்தும் , கரட்டில் உள்ளதைப் போல நாலு மடங்கு வைட்டமின் ஏயும் இருக்கின்றன.

மேலும் முருங்கை இலை ,பூவும் கூட மருத்துவ சக்தி கொண்டவைதான். இவை உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

 
மருத்துவக் குறிப்பு: Print E-mail
Written by Dr. Somash   

தெரிந்து கொள்வோம் நண்பர்களே:

மருத்துவக் குறிப்பு:

இன்று பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலவித பயிற்சிகளிலும் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடியும்.பயிற்சிகளுக்கு நேரம் குறைவாக உள்ளவர்கள் வீட்டில் இருந்த படியே இந்த பானத்தை தயாரித்து குடித்து வந்தால் இலகுவாக எடை குறைவதை அவதானிக்க முடியும். முயற்சித்துப் பாருங்களேன்:
இத்தனை பயிற்சிகளால் மட்டுமன்றி, சில உணவுகளாலும் கொழுப்பு எளிதில் கரையும். தொடர்ந்து இரண்டு மாதங்கள் குடித்து வந்தால் பலன்கள் கிடைப்பது உறுதி.

வெள்ளரியும் எலுமிச்சையும் குறைந்த கலோரிகள் கொண்டவை. இவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இவற்றைக்கொண்டு தயாரிக்கும் பானம் வெயிட் லாஸுக்கு பெரிதும் உதவி புரியும் எனலாம். இதில் சேர்க்கப்படும் இஞ்சியும் கற்றாழையும் மெட்டபாலிக் செயல்முறையைச் சீராக்கும்.

இந்த பானத்தை எப்படிச் செய்வது எனப் பார்ப்போமா? வெள்ளரி - 1 
எலுமிச்சை - 1 
புதினா - 4 
இஞ்சி - ஒரு டீஸ்பூன் 
கற்றாழைத் துண்டுகள் - 3 
தண்ணீர் - அரை டம்ளர் 
இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைத்து ஜூஸாக இரவு படுக்கப் போவதற்கு முன்னர் குடித்துவிட்டு, இருபது நிமிடங்கள் கழித்துத் தூங்கச் செல்லலாம். தொடர்ந்து இரு மாதங்களுக்குக் குடித்து வருவது நல்லது. கட்டுடல் கிடைக்க வாழ்த்துகImage may contain: drink and foodள்.     prepared by panchadcharan swaminathasarma

 
More Articles...