தீபங்கள் பதினாறு : தூபம், தீபம்.................. Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, பல அரிய விடயங்களை திரட்டி, தொகுத்து, பல ஆன்மிக நூல்களின் தகவல்களின் அடிப்படையில் உங்களுக்கு தருவது உங்கள் MIH மொடேர்ன் சர்வதேச இந்து ஆகம கலை கலாச்சார நிறுவனம். அந்த அடிப்படையில் இன்றைய அரிய தகவல் இது:

தீபங்கள் பதினாறு : தூபம், தீபம் புஷ்பதீபம் (பூ விளக்கு), நாத தீபம், புருஷா மிருகதீபம், கஜதீபம், ருயாஜத (குதிரை) தீபம், வியாக்ர (புலி) தீபம், ஹம்ஸ் (அன்னம்) தீபம், கும்ப (குடம்) தீபம், குக்குட (கோழி) தீபம், விருக்ஷ தீபம், கூர்மா (ஆமை) தீபம், நட்சத்திர தீபம், மேருதீபம், கற்பூர தீபம் என தீபங்கள் 16 வகைப்படும்.

தூக்கு விளக்குகள் ஒன்பது : 1. வாடா விளக்கு 2. ஓதிமத்தூக்கு விளக்கு 3. தூண்டாமணி விளக்கு 4. ஓதிம நந்தா விளக்கு 5. கூண்டு விளக்கு 6. புறா விளக்கு 7. நந்தா விளக்கு 8. சங்கிலித் தூக்கு விளக்கு 9. கிளித்தூக்கு விளக்கு.

பூஜைவிளக்குகள் ஒன்பது : சர்வராட்சததீபம், சபூத தீபம், பிசாஜ தீபம், கின்னர தீபம், கிம்புரு தீபம், கணநாயக தீபம், வித்யாகர தீபம், கந்தர்வ தீபம், பிராக தீபம் ஆகியவை 9 வகை பூஜை விளக்குகளாக வழக்கத்தில் உள்ளன. சரவிளக்கு, நிலை விளக்கு, கிளித்தட்டு விளக்கு ஆகியன கோவில் விளக்குகளின் மூன்று வகைகளாகும்.கைவிளக்குகள் ஏழு : கஜலட்சுமி விளக்கு, திருமால் விளக்கு, தாமரை விளக்கு, சிலுவை விளக்கு, சம்மனசு விளக்கு, கணபதி விளக்கு, கைவக் விளக்கு ஆகியவை கை விளக்குகளாகும்.

நால்வகை திக்பாலர் தீபங்கள் : ஈசான தீபம், இந்திர தீபம், வருண தீபம், யம தீபம்.

அஷ்டகஜ தீபங்கள் எட்டு : ஐராவத தீபம், புண்டரீக தீபம், குமுத தீபம், ஜனதீபம், புஷ்பகந்த தீபம், சர்வ பவும தீபம், சுப்ரதீபம், பித்ர தீபம்.

prepared by panchadcharan swaminathasarma

 
ஆலய பிரகாரத்தை வழிபடுவது எப்படி? Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, பல ஆலயங்களில் நாம் அவதானித்துள்ளோம், பல அன்பர்கள் அவசரமாக ஓடி ஓடி பிரகாரம் வலம் வந்து கொண்டிருப்பார்கள். அதுதவறு. சிறு வயதில் இருந்தே பிள்ளைகளுக்கு ஆலய வழிபாட்டு முறைகளை கற்பிக்க வேண்டும்.

ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள். சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு. ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது. குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும். 
-நன்றி ஆன்மிக மலர்.:- prepared by panchadcharan swaminathasarma.

 
More Articles...