''ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்'' எவ்வளவு தூரம் தவறாக கருதப்பட்டு இன்று பின் பற்றுகிறார்கள்! Print E-mail
Written by Dr. Somash   

''ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்'' எவ்வளவு தூரம் தவறாக கருதப்பட்டு இன்று பின் பற்றுகிறார்கள்!

ஜோதிட சாஸ்திரத்தில் மிதுன ராசியில் சூரியன் இருக்கும் மாதமே ஆனி மாதம். மிதுனம் ஆண் ராசி. இந்த மாதத்தில் வரும் மூல நட்சத்திரம் பெரும்பாலும் பௌர்ணமி திதியை ஒட்டியே வரும். சூரியன் கன்னி ராசியில் இருக்கும் மாதம் புரட்டாசி. கன்னி- பெண் ராசியாகும். இந்த மாதத்தில் வரும் மூலநட்சத்திரம் பெரும்பாலும் அஷ்டமி திதியுடன் சேர்ந்து வரும்.

எப்போதுமே நல்ல காரியங்களுக்கு பௌர்ணமி திதியே ஏற்றதாகக் கொள்ளப்படும்; அஷ்டமி திதியை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள். ஆக, பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன (ஆண்) ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால், இன்னும் திரிபு ஏற்பட்டு 'ஆண் மூலம் அரசாளும்’ என்றாகிவிட்டது.

அதேபோன்று, கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி 'கன்னி மூலம் நிர்மூலம்’ எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு 'பெண் மூலம் நிர்மூலம்’ என்றாகிவிட்டது.

எனவே, மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதுவும் தவறான வாதம் ஆகும்.


 
சூரிய மண்டலத்துக்கு வெளியே 28 புதிய கிரகங்கள் Print E-mail
Written by Dr. Somash   

சூரிய குடும்பத்தில் ஏற்கனவே 9 கிரகங்கள் உள்ளன. இந்த நிலையில் வான்வெளி நிபுணர்கள் நடத்திய ஆய்வில் சூரிய குடும்பத்துக்கு வெளியே மேலும் ஏராளமான கிரகங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

அவற்றில் உயிரினங்கள் வாழ முடியுமா என்பது குறித்தும் ஆய்வு நடந்து வருகிறது. சமீபத்தில் பூமியை போலவே உள்ள சூப்பர் பூமி என்ற புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்தனர்.

இப்போது அமெரிக்க நிபுணர்கள் மேலும் 28 புதிய கிரகங்களை கண்டு பிடித்துள்ளனர். இந்த கிரகங்கள் நட்சத்திர கூட்டங் களை மையமாக வைத்து சுற்றி வருகின்றன.

இந்த 28 புதிய கிரகங்களையும் சேர்த்து மொத்தம் 236 சிறு கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவைகளில் சில பூமியை போலவே உள்ளன. உயிரினங் கள் வாழ வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அபூர்வ வாயுக்கள் விலங்கினங்கள் ஆகிய வையும் இவற்றில் உள்ளன.