இந்த உடல் தேவாலயம் Print E-mail
Written by Dr. Somash   

இன்றைய சிந்தனை:

இந்த உடல் தேவாலயம். அதில் குடிகொண்டிருக்கும் ஜீவன் என்றும் விளங்கிக் கொண்டிருக்கும் கடவுள். அறியாமை என்கிற நிர்மால்யத்தை (முதல் நாள் பூஜையில் நிறைந்த பழைய புஷ்பங்கள்), அகற்றி, அந்த ஜீவன்தான் கடவுள் என்று வழிபாட்டில் ஈடுபடு’ என்பது மகான்களின் அறிவுரை (தேஹோதேவாலய: ப்ரோத்தோ…).

‘உன்னில் உறைந்திருக்கும் ஆன்மாதான் (ஜீவாத்மா) கடவுள் என்பதை மறைக்கும் அறியாமையை (நிர்மால்யத்தை) அகற்றினால் தெய்வம் பளிச்சிடும்; வழிபட இயலும்!’ – இது ஸனாதனத்தின் சாரம்