உலக மக்களை காக்க சக்தியாக.......... Print E-mail
Written by Dr. Somash   

உலக மக்களை காக்க சக்தியாக அம்பாள் உருவெடுத்தாள். சித்தர்களும், யோகிகளும் இந்த நாளில் தவத்தை துவக்குவதாக புராணங்கள் கூறுகின்றன. வைண வத்திருக் கோவில்களிலும் திருவாடிப்பூரம் பத்து நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. ஏனென்றால் ஆண்டாள் அவதரித்த நட்சத்திரம் பூரம். 
இந்த ஆடிப்பூர நன்னாள் அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி அழகு பார்த்தனர் பக்தர்கள். அம்மனை அழகுற அலங்கரித்து முளைகட்டிய தானியங்களை அம்மனது வயிற்றில் கட்டி கைகளில் வளைகள் மாட்டி வளைகாப்பு உற்சவம் நடத்தி அழகுற வழிபட்டனர் பக்தர்கள்.
இந்த நன்னாளில் அம்மன் ஆலயங்களூக்கு சென்று வழிபட நம் துன்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும் என்பது மரபு.