நல்லதே நினைத்தால்........ Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே அறிந்து கொள்வோம்.

நல்லதே நினைத்தால் நல்லதே நடக்கும். வெற்றி பெற்றவனோடு பேசும்போது நாமும் வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணமும், அவரை போல் பொறுமையாக இருந்து சாதிக்க வேண்டும் என்ற மன உறுதியும் ஏற்படும்.
மனிதர்களுக்கு அவர்களை அறியாமலே நிறைய ஆற்றல் இருக்கிறது. அந்த ஆற்றல் எப்போது வேலை செய்ய ஆரம்பிக்கிறது என்றால், சாதித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் வரும்போதுதான் அந்த ஆற்றல் வெளிப்படுகிறது. அதுபோல, நமது நட்பும் சாதிக்க வேண்டும் என்கிற மன உறுதியும், தன்னம்பிக்கையும் உள்ளவர்களிடமே இருக்க வேண்டும்.

என்னடா இது வாழ்க்கை என்று சலித்துகொள்பவர்களிடத்தில் பழகினால், குட்டைக்குள் ஊறிய மட்டை எதற்கும் பயன்படாமல் போவது போல் போய் விடும்.
மழை தண்ணீர் குளத்தில் விழுந்தால் அதை உபயோகிக்கலாம். அதே மழை தண்ணிர் சாக்கடையில் விழுந்தால் யாருக்காவது பயன்படுமா? அதனால், உயர்ந்தவர்களின் நட்பும், நல்லோரின் நட்பும்தான் பயன் தரும். இப்படிதான் நல்ல படியாக வாழ வேண்டும் என்ற எண்ணமும் வரும். அதுவே, நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்.:தொகுப்பு -பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா