உடலையும் உள்ளத்தையும் பேண என்ன வழி? Print E-mail
Written by Dr. Somash   

moderninternational Hinduculture

நண்பர்களே,பிரம்மஸ்ரீ சேஷாத்திரி நாத சாஸ்திரிகள் என்ன கூறுகிறார் பார்ப்போம்.

உடலையும் உள்ளத்தையும் பேண என்ன வழி?

வேதம் சொல்லும் நல்லுரைகள், மகான்கள் பரிந்துரைக்கும் நல்லுரைகள், 'அறம் செய்ய விரும்பு; ஆறுவது சினம்’ போன்ற பேருரைகள், மனதை நல்ல சிந்தனையில் திருப்பிவிடும். உடலுக்கு இதமானவலுவூட்டும் தாவரங்களை உணவாக ஏற்கச் சொல்லும் ஆயுர்வேதத்தின் பரிந்துரைகள், உடலை வலுவாக்கி இயங்க வைக்கும். ஆசைகளின் உந்துதலில் மனம் நல்லது கெட்டதை அறியாது. புத்தி அதை ஆராய்வதற்கு உகந்த தகவலை எதிர்பார்க்கும். அத்தகைய தகவல்களை அற நூல்கள் அள்ளிக் கொடுக்கும். அதன் அடிப்படையில் ஆராய்ந்து நேர்வழியைப் பரிந்துரைக்கும். அதன் போக்கில் மனம் செயல்பட்டு, புலன்களின் உதவியில் மகிழ்ச்சி யான வாழ்க்கையை உணர்த்தும்.

ஆன்மாவோடு இணைந்த மனம், உடலை வழிநடத்தும். ஆன்மா, மனம், உடல், புலன்கள் ஆகிய அனைத்தையும் தினமும் கண்காணிக்க வேண்டும். மனம் சார்ந்த சிந்தனையும் வேண் டும்; உடல் சார்ந்த உழைப்பும் வேண்டும். ஆன்மிகமும் வேண்டும்; உலகவியலும் வேண்டும். உணவுக் கட்டுப்பாடும் தேவை; சிந்தனையிலும் சுத்தம் தேவை. காலையில் நீராடி உடல் சுத்தமாக வேண்டும். நெற்றியில் திலகமிட்டு கடவுளை மனம் நினைக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்துக்கு உகந்த உணவை ஏற்க வேண்டும். புலன்கள் தழைத்து ஓங்க உழைக்க வேண்டும். உள்ளத் தெளிவுக்கு அற நூல்கள் உரையை ஏற்கவேண்டும். அதன் வலுவுக்கு கடவுள் பெயரை மனம் அசைபோட வேண்டும்; MIH சார்பில் தொகுத்தவர் பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா