அன்புக்கு எல்லை ஏது? Print E-mail
Written by Dr. Somash   

அறிந்து கொள்வோம்"

அன்புக்கு எல்லை ஏது?

அன்பு ஜாஸ்தியாக ஆக, ரூப அழகைப் பார்ப்பதுகூடக் குறை த்துகொண்டேவர ஆரம்பிக்கிறது. அன்பே உருவானவர்க ளை, அவர்களுடைய ரூபம் எப்படியிருந்தாலும், திரும்பத் திரும்ப பார்த்துக்கொண்டே இருக்கிறோம் என்றால், அப் போது அன்புதான் அழகு என்று ஆகிவிடுகிறது. கன்னங்கரே லென்று, பல்லும் பவிஜுமாக ஒரு தாயார்க்காரி இருந்தால் கூட, அவளுடைய குழந்தை அவளை விட்டு யாரிடமும் போகமாட்டேன் என்று பிடித்துக் கொள்கிறது. அசலார் யாராவது ரொம்ப அழகானவர்கள் தூக்க வந்தால் அவர்களிடம் பயந்து கொண்டுவந்து, குரூப மான அம்மாவைத்தான் கட்டிக் கொள்கிறது. காரணம் என்ன? அவளுக்குத் தன்னிடம் உள்ள பெரிய அன்பை
அது தெரிந்து கொண்டிருக்கிறது! நமக்கு ஒன்றைப் பார்ப்பதி ல் ஆனந்தம் ஏற்படுவதால் தான் திரும்பத் திரும்பப் பார்க்கிறோம். ஆனந்தத்தை அளிக்கவல்லதில் தலைசிறந்தது அன்புதான். அன்பு தருகிற ஆனந்தத்துக்கு ஸமமாக எதுவும் இல் லை. இதனால் ஆனந்தத் தைத் தரும் அன்பே அழகாகி விடுகிறது; திரும்பத் திரும்ப ஆசை யோடு பார்க்கப் பண்ணுகிறது.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்: தொகுத்தவர் -பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா.