சைவ உணவை சாப்பிட்டால் பலம் இருக்காதா? Print E-mail
Written by Dr. Somash   

மனிதன் உயிர் வாழ உதவும் சக்தியாக உணவு உள்ளது. இந்த உணவில் சைவ உணவு மற்றும் அசைவ உணவு என இருவகை உள்ளது. கொட்டைகள், பருப்பு, தானியம், பச்சைக்காய்கறி, பால், தயிர், மோர், வெண்ணெய் ஆகியவை சைவத்தில் அடக்கம். முட்டைகள், மாமிசம் மற்றும் மீன் போன்றவை அசைவத்தில் அடக்கம். இதில் அசைவம் உண்டால் அதிக பலசாலியாக வாழலாம் உடல் ஆரோக்கியத்துடனும் வாழலாம் என ஒரு தவறான அபிப்பிராயம் பலரிடம் உள்ளது. ஆனால் இது உண்மையல்ல.

 

அசைவ உணவில் புரதமும், கொழுப்புச் சத்தும் அதிகம் இருப்பது உண்மை. ஆனால் மாவுச்சத்தும், நார்சத்தும் இல்லை. இதற்கு மாறாக சைவ உணவில் அனைத்து சத்துக்கள், தாது உப்புக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இதனால் உணவே மருந்தாகி விடுகிறது. ஆக சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிக ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள். நூறு தலைமுறையாய் சைவ உணவு மட்டுமே உண்டு ஆரோக்கியமாய் இருக்கும் மனிதர்கள் ஏராளம். குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்களில் அசைவ உணவு சாப்பிடுபவர்களை விட சைவ உணவு சாப்பிடுபவர்கள் அதிகம்.

 

தமிழகத்தில் சுமார் 80 சதவீதத்தினர் அசைவ உணவு பழக்கம் உடையவர்களாக இருப்பதாக கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இவர்களில் பலர், அசைவம் சாப்பிடுவதை வாரத்திற்கு ஒருமுறை இரு முறை என குறைத்துக் கொண:டு விட்டார்கள். முட்டையை மட்டும் எடுத்துக் கொள்ளும் அசைவ உணவுக்காரர்களும் இருக்கின்றனர்.

 

கால்நடை பிராணிகளில் பல சைவ உணவை மட்டும் உட்கொள்பவை. பசு, எருமை ஆகியவை புல், வைக்கோல், தவிடு, புண்ணாக்கு மற்றும் பருத்திக்கொட்டை ஆகியவற்றை மட்டும் சாப்பிட்டு நமக்கு பாலை வழங்குகின்றன. பெரிய பெரிய மரங்களை அலட்சியமாய் தூக்கும் யானைகளோ வாழைப்பழம், கரும்பு அரிசி மற்றும் வெல்லம், பயறு ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரேஸ்களில் தலைதெறிக்க ஓடும் குதிரைகள் சாப்பிடுவது கூட புல்லைதான். தானியங்களையும், கனிகளையும் மட்டுமே உண்டு கண் சிமிட்டும் நேரத்தில் ஓடி மறைந்து விடும் அணில் பவனி வருவதுகூட சைவ உணவில்தான். மிகப் பெரிய மிருகமான ஒட்டகச்சிவிங்கி கூட சைவ உணவுதான் சாப்பிடுகிறது. ஆக இவற்றின் மூலம் சைவ உணவு சாப்பிட்டால் பலம் இருக்காது என்ற ஓட்டை வாதம் அடிப்பட்டு போகிறது. மாறாக அசைவ உணவில் கொழுப்புச்சத்து அதிகம். இதன்மூலம் கொலஸ்ட்ரால் ஆபத்து அதிகம்.

 

புலால் உணவில் நச்சும், கர்pயும் கலந்திருப்பதால் அவை நம் உடலை தாக்கி சிறுநீரகத்தையும் காலத்தால் பாதிக்க வைக்கின்றன. சைவ உணவைச் சாப்பிடுபவர்களைவிட அசைவ உணவைச் சாப்பிடுபவர்களுக்கே அதிகம் மஞ்சள் காமாலை வருவதாக கண:டு பிடித்துள்ளனர். அசைவ உணவை சாப்பிடுபவர்கள் புகை பிடிப்பதிலும், மது அருந்துவதிலும் அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள். இதனால் புற்றுநோய் வரும் வாய்ப்பும் அதிகம். மேலும் அடிக்கடி கோபம், ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் ஆகியவை ஏற்படவும் வாய்ப்பு உண்டு. அசைவ உணவை ஒழுங்காக வேகவில்லை என்றாலும் பிரச்சினைதான். இதனால் மிருகங்களின் உள் உறுப்புக்களில் காணப்படும் வியாதிகள், நோய்கிருமிகள் சாப்பிடுபவரையும் பாதிக்கக் கூடும். சைவ உணவில் வேகவில்லை என்ற பிரச்சினையே கிடையாது. பச்சையாகவே சாப்பிடலாம். ஆக மனிதனுக்கு இவை மிக பாதுகாப்பான உணவாகி விடுகின்றன.

 

நமது தாவரங்களிலேயே மனிதனுக்கு தேவையான அனைத்து விட்டமின்களும் உள்ளன. பால், பாலாடை, வெண்ணெய் ஆகியவற்றில் விட்டமின் ஏ உள்ளது. இவற்றுடன் பால் அல்லது வெண்ணெய் சேர்த்துக் கொண்டால் அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். சாக்ரடீஸ் அரிஸ்;டாட்டில் பிளாட்டோ போன்ற தத்துவ மேதைகளும் சேக்ஷ்பியர், டால்ஸ்டாய் பெர்னாட்ஷா, தாவூர் மற்றும் பாரதியார் போன்ற இலக்கியவாதிகளும் முழு சைவ உணவுக்க்காரர்களே. இவர்களின் மூலம் மரக்கறி உணவால் சக்தியோடு புத்திசாலித்தனம் மற்றும் சுறுசுறுப்பும் கிடைப்பது தெளிவாகிறது இதனால் பல்லாயிரக்கணக்கான வெள்ளைக்காரர்கள், சீனர்கள்கூட தாவர உணவு உடகொள்வதை மேற்கொள்ளுகின்றனர். தாமும் அசைவ உணவு உட்கொள்ளுவதுடன் தமது குழந்தைகளையும் வற்புறுத்தி அசைவ உணவை உட்கொள்ள வைக்கும் நம்மவர்கள் கவனிப்பார்களாக.