இயற்கை வாசனை Print E-mail
Written by Dr. Somash   

செயற்கை மணம் அலர்ஜியை உண்டாக்குவது ஏன்?

வாசனை என்றவுடன் நம் மூக்கின் ஞாபகத்திற்கு வருவது பூக்கள்தான். இது பூக்களுக்கு இயற்கை அள்ளித் தந்த பரிசு. இந்த மலர்களின் வித விதமான வாசனையை மனிதன் எப்படி உணர்கிறான்?, நமது உடம்புக்குள் நம்மை அறியாமல் நரம்புகளுக்கும் மூளைக்குமிடையெ ஒரு தகவல் பறிமாற்றுப் பணி நடைபெறுகிறது. நமது மூக்குப்பகுதியில் இருக்கும் சட்கான்!; விர்சூ; என்கின்ற உணர்வு நரம்பபுகள் வழியாக வாசனையானது மூளையின் நியூட்ரான் செல்களை அடைந்து, வாசனையை உணரச் செய்கின்றன. நல்ல உணர்வுகளை தூண்டுபவைகளை வாசனை என்றும் அருவருப்பை தூண்டுபவைகளை நாற்றம் என்று குறிப்பிட்டாலும் புத்துணர்ச்சியை, உற்சாகத்தை ஏற்படுத்தும் சக்தி வாசனைக்கு உண்டு. இந்த சக்திக்கு வில்வாட் என்று பெயராகும்.

இயற்கையான வாசனை எல்லோருக்கும் ஒத்துக்கொள்ளும். ஆனால் செயற்கையான மணம் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கும். இதனால் சிலருக்கு தலைவலிக்கும். இதற்கு காரணம் செயற்கை மணத்தை யூரொபில்ட்! என்கின்ற ரசாயனம் கலந்து தயாரிப்பதுதான். இந்த ரசாயனம் தான் பலருக்கு அலர்ஜியை உண்டாக்கி விடுகின்றது. இவர்கள் சென்ட் வகைகளை தவிர்ப்பது நல்லது. மூலிகைச்சத்துக்கள் நிறைந்த மலர்களை நாம் காதில் வைத்திருந்தால், அல்லது தலையில் சூடிக்கொண்டிருப்பதனால் என்ன பயன் என்பதனை காதுகளில் உள்ள “இயர் அக்குபொயின்ற்ஸ்” என்னும் கட்டுரையில் வாசிக்கவும்.