பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசிக்க........ தாய் தந்தையருக்கு இது சமர்ப்பணம்! Print E-mail
Written by Dr. Somash   

பிள்ளைகளின் எதிர்காலம் பிரகாசிக்க........  தாய் தந்தையருக்கு இது சமர்ப்பணம்!

எந்நேரமும் உங்கள் குழந்தைகளை படி படி என்று கொடுத்துக்கொண்டு இருக்காதீர்கள் 
சராசரியாக 30 - 45 நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து ஒரே விஷயத்தை குழந்தைகளால் கிரகிக்க முடியாது.படிக்க முடியாது. இதை பொருட்படுத்தாதபோது அவர்களில் சிலருக்கு தூக்கம் கண்ணைக் கட்டும், சிலர் எழுந்து டி.வி பார்க்க, விளையாட விரும்புவார்கள். இதற்கு வழியின்றி பெற்றோர் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி படிக்கத் தூண்டும்போது முதலுக்கே மோசமாக அவர்களுக்கு படிப்பின் மீது வெறுப்பு வர ஆரம்பித்துவிடும், அல்லது படிப்பது போல் நடிக்க ஆரம்பித்து விடுவார்கள். இந்த தடுமாற்றம் மூளை தொடர்பானது. அதிகபட்சம் ஒருமணி நேரத்துக்கு ஒரு முறை பிரேக் தந்து, மூளையை ரிலாக்ஸ் செய்துகொள்வதற்கும், தனது ரசாயன நிலையை மீட்கவும் வாய்ப்பு தரவேண்டும். பரீட்சை நேரம் என்றால்கூட... கடினமான பாடங்களுக்கு இடையே ஈஸியான பாடங்கள் என்றோ, படிப்பதற்கு பதில் எழுதுவது என்றோ மாற்று உபாயங்களை புகுத்த வேண்டும்.  அந்த வகையில் உங்கள் குழந்தையை உற்சாகப்படுத்துவதன் மூலமாக மட்டுமே மேற்கொண்டு அவரை சிறப்பாக வழிநடத்தலாம். அவர் கடக்கும் சிறு வகுப்புத் தேர்வு உள்ளிட்ட ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும் உடனிருங்கள். கவனித்து சிறுசிறு வளர்ச்சியையும் ஊக்கப்படுத்துங்கள். அவரது தன் மதிப்பை உணரும் தருணங்களை அதிகப்படுத்துங்கள். இதனால் தானாக தன்னம்பிக்கை அதிகரிக்கும். படிப்பு தவிர பிற கல்வி சார் செயல்பாடுகளில் ஆர்வம் இருப்பின் அதிலும் ஈடுபடச் செய்யுங்கள். அவருக்கு திறமை இருப்பின் கல்ச்சுரல்ஸ், கேம்ஸ் உள்ளிட்ட துறைகளில் பங்கேற்க அனுமதிக்கலாம். இதில் கிடைக்கும் உற்சாகத்தை படிப்பிலும் மடைமாற்ற முடியும். பள்ளிச்சூழல் அவருக்கு ஆர்வமுள்ளதாக மாறும். பிள்ளைகளின்  ஆசிரியரை சந்தித்து கூடுதல் கவனத்துக்கு ஆலோசிக்கலாம். இறுதியாக, உங்கள் மகளின் தகுதி 80% என்றால் மேற்கொண்டு 5% பெற ஆரோக்கியமான ஊக்குவிப்பை தாருங்கள். ஆனால், 99% பெறவேண்டும் என்று எடுத்ததுமே ஆசைப்படாதீர்கள்.''