''ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் என்ன?'' Print E-mail
Written by Dr. Somash   

''ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்பதன் பொருள் என்ன?''

அது என்ன ஆயிரம் தடவைகள் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை நடத்துவது?  பொய் பேசக்கூடாது என்று பாடம் சொல்லித்தருகிறார்கள்.பிறகு எப்படி பொய் சொல்லி கல்யாணம் நடத்த முடியும்? இது மிகப்பெரிய பாவமான செயல்  அல்லவா? ஏமாற்றும் செயல் அல்லவா? ஏமாற்றி கல்யாணம் செய்து வைப்பது போல் அல்லவா இந்தசெயல். ஆராய்ந்து பார்த்ததில் அறிந்த உண்மை என்ன என்றால் எத்தனை தடவைகள் என்றாலும் பெண் வீட்டுக்கும் மாப்பிள்ளை வீட்டுக்கும் நடந்து திரிந்து அலைந்து திரிந்து என்றாலும் இந்த நல்ல விடயத்தை ஒப்பேற்று  என்பதைத்தான் இது தெரிவிக்கிறது.
ஒருவர் தன் வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பொய் சொல்வது உகந்ததல்ல. ஆயிரம் முறை மாப்பிள்ளை வீட்டுக்கோ, பெண் வீட்டுக்கோ போயாவது ஒரு கல்யாணத்தை நடத்தி வை என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். போய் என்பதே பேச்சுவழக்கில் பொய் என்று மாறி விட்டது. இந்தப் பொய்யை உண்டாக்கியது எந்த புண்ணியவானோ? தெரியவில்லை.