ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி... Print E-mail
Written by Dr. Somash   

தகவல் திரட்டியவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாதசர்மா 


ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி...

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டியாவான்..இப்படி நம்மவர்கள் பேசிப்பேசியே கலக்கம் அடைந்தவர்களாக இருப்பார்கள். ஐந்து பெண் பிள்ளைகளை பெற்ற பலர் இப்படியான கலக்கத்தில் இருந்திருப்பதை நாம் பல இடங்களில் பார்த்திருக்கிறோம்.பிழையான விளக்கத்தினால் கவலை அடைகிறோம் . சரியான விளக்கத்தை அறிந்து கவலைகளை விட்டொழிப்போம்.

அறிந்த விளக்கம் :

யாரோ ஒரு புண்ணியவான்
போன போக்கில்
ஐந்தும் பெண்
பெற்றால்
அரசனும் ஆண்டி தான் என சொல்லிவிட,
நாளடைவில்
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என மாறி
பெண் பிள்ளைகள் அதிகம் உள்ள தந்தை மனதில்
புயல் அடிக்க செய்து விட்டனர்..

உண்மை அதுவல்ல..

அறிந்து கொள்ள வேண்டிய சரியான  விளக்கம் :

ஐந்து பெற்றால் என்பதில் வரும் அந்த ஐந்து விடயங்கள்..

1) ஆடம்பரமாய் வாழும் தாய்,

2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,

3) ஒழுக்கமற்ற மனைவி,

4) ஏமாற்றுவதும் துரோகமும்
செய்யக்கூடிய உடன்
பிறந்தோர் மற்றும்

5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள்
என்பதாகும்..

இவர்களை கொண்டிருப்பவன்,
அரசனே ஆனாலும் கூட
அவனது வாழ்க்கை வேகமாய் அழிவை நோக்கி போகும் என்ற
அர்த்தத்திலேயே ஆண்டி என்ற பிரயோகம்
இங்கு பயன்படுகிறது...