தோல்விக்கு அஞ்சாமையே... உங்கள் வெற்றிக்கான முதல்படி!'' Print E-mail
Written by Dr. Somash   

தோல்விக்கு அஞ்சாமையே... உங்கள் வெற்றிக்கான முதல்படி!''

 

''எங்கே தோற்றுவிடுவோமோ என்கிற பயத்தில், ஜெயிப்பதற்கான சாத்தியங்களில் இருந்து வழுக்கிப் போய், தோல்வியைத் தழுவிக் கொள்கிறீர்கள். இந்தத் தோல்வி பயம் (Fear of Failure)நெருக்கடி சமயத்தில் அதிகமாகும். மனப்பதற்றத்தை அதிகமாக்கி விடும். Interview-  நேர்காணல் தினத்தன்று ஆழ்ந்த மூச்சுப் பயிற்சியை மேற்கொண்டு, தனக்குத்தானே உத்வேகம் அளிக்கும் வாசகங்களை வாய்விட்டு உச்சரியுங்கள். எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி, கடந்து வந்த வெற்றிகளை சற்றே அசை போடுங்கள்.

அன்றைய தினத்துக்கான தோற்றத்தில்  கவனம் செலுத்துவதும் நல்லது.
குறிப்பிட்ட நிறுவனம் தொடர்பான அத்தியாவசிய விவரங்களையெல்லாம் அறிந்து வைத்திருப்பதோடு, உங்களது Resume- ரெஸ்யூமில் நீங்கள் தந்திருக்கும் விவரங்கள் தொடர்பான கூடுதல் தகவல்களை இணையம் வாயிலாகவோ துறைசார்ந்தவர்கள் மூலமாகவோ திரட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில், சகல விடையங்களிலும்  எச்சரிக்கை காட்டிவிட்டு, பெரும்பாலானவர்கள் இந்த இடத்தில்தான் திணறுகிறார்கள்.

தோல்வி என்பது வரத்தான் செய்யும். உங்களுக்கான தோல்விகள் அதிகமாகும்போது, மேலும் நீங்கள் பட்டை தீட்டப்படுகிறீர்கள். அந்த அனுபவங்கள், உங்களின் மிகப்பெரும் சொத்தாக மாறும். வேலை கிடைப்பது மட்டுமே வெற்றியல்ல... அதைத் தாண்டியும் அன்றாடம் போராட்டங்கள் காத்திருக்கின்றன. அவற்றையெல்லாம் அணுகுவதற்கு, உங்களுடைய இன்றைய தோல்விகள் உதவும். எனவே, தோல்விக்கு அஞ்சாமையே... உங்கள் வெற்றிக்கான முதல்படி!''