தாம்பத்தியம் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே: Print E-mail
Written by Dr. Somash   

தாம்பத்தியம் என்றால் என்ன? அறிந்து கொள்ளுங்கள் நண்பர்களே:

தாம்பத்யம் என்பது அச்சம் தருவது அல்ல... அதுவும் ஓர் அன்புப் பகிரல்தான் என்பதை ஆணும் பெண்ணும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் .அது பயனளிக்காதபோது, நெருக்கமான தோழிகளோ, குடும்ப உறுப்பினர்களோ, தேவைப்பட்டால் குடும்பநல ஆலோசகர்கள் மூலமாகவோ  திருமணம் செய்து கொள்ளும் ஆண்களிடமும் பெண்களிடமும்  பேசி எடுத்துச் சொல்லப்பட வேண்டும். . இல்லைஎன்றால் பொதுவாக  பெண் மனதில் தாம்பத்யம் பற்றிய பயத்தை இன்னும் அதிகரிக்கவே செய்திருக்கும்.பயம் மட்டுமல்ல வாழ்கையில் வெறுப்புத்தான் மிஞ்சும்.

பொதுவாக, உறவு விஷயத்தில் விருப்பமில்லாமல் கட்டாயப்படுத்தப்படுகிற பெண்களின் மனநிலை மிகவும் பாதிப்புள்ளாகும். காட்டாய தாம்பத்யம்... பதற்றம் சம்பந்தமான நோய்கள், அதிர்ச்சி, அளவுக்கு அதிகமான பயம், ஒருவித இறுக்கம், மனஅழுத்தம் போன்ற தாக்கங்களுக்கு எல்லாம் பெண்களை ஆளாக்கும். கணவனைப் பற்றிய நெகட்டிவ் எண்ணங்களை அதிகப் படுத்தும். சுற்றத்தினரிடமும் இதைப் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலில், ஒருவித எமோஷ னல் பெயின் அவர்களை விழுங்கும். சுய கௌரவம், தன்மானம் குறையும். சுய பச்சாதாபம் அதிகமாகும். ஒரு கட்டத்தில் உள்ளுக்குள் தற்கொலை எண்ணம் வந்துவிடுதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கணவனை பிரிந்துவிடும் முடிவுக்கும் வருவார்கள். நிறைவாக  இங்கு குறிப்பிட விரும்புவது முக்கியமாக  ஆண்களுக்கான அறிவுரை :

''தாம்பத்யம் என்பது... ஆண்களின் உரிமையோ, அதிகாரமோ இல்லை. அது ஆணும் பெண்ணும் அன்பினால் அடைய வேண்டியது. பெண்ணின் மனநிலை, உடல்நிலை என்று அவளுக்கான சூழல்கள் குறித்து ஆண் புரிந்துகொள்ள வேண்டும். விருப்பமில்லாத சூழலில் ஆத்திரப்படாமல், அவள் முடிவுக்கு மரியாதை கொடுக்க வேண்டும். மாறாக, அடிமைப்படுத்தி அவளை அடைந்தால், அது தாம்பத்தியமில்லை... பாலியல் குடும்ப வன்கொடுமை!''