எல்லோருக்கும் பொதுவான குங்குமப்பூ ! Print E-mail
Written by Dr. Somash   

எல்லோருக்கும் பொதுவான குங்குமப்பூ !

குங்குமப்பூ என்றவுடன் அனைவருக்கும் நினைவுக்கு வருவது கர்ப்பவதி பெண்கள் குங்குமப்பூவை பாலில் சிறிய அளவு போட்டு சாப்பிட்டால் குழந்தை சிகப்பாக பிறக்கும் என்று கூறுவார்கள். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியாது.
ஆனால் குங்குமப்பூவுக்கு அற்புதசக்தி இருக்கிறது என்பது மட்டும் உண்மை. குங்குமப்பூவை தினமும் பாலில் 5 நிமிடம் ஊற வைத்து கர்ப்பமாக உள்ள பெண்கள் அருந்தினால், அந்த கர்ப்பவதியின் ரத்தம் சுத்தகரிக்கபடும். நன்றாக பசி எடுக்கும். பொதுவாக தாய்மை அடைந்த பெண்களுக்கு பசி உணர்வு இருக்காது. இதனால் சரியாக சாப்பிடாமல் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு போதிய ஆகாரம் இல்லாமல் அவதிப்படும். வயிற்றில் இருக்கும் குழந்தையின் கஷ்டத்தை போக்கும் ஆற்றல் குங்குமப்பூவுக்கு இருக்கிறது.


குங்குமப்பூவை தொடர்ந்து பாலில் ஊற வைத்து அருந்தி வந்தால் நன்றாக பசி எடுக்கும். இதனால் குழந்தைக்கு நல்ல உடல் வலிமை கிடைக்கும். அந்த தாய், ஆரோக்கியமான குழந்தையை பிரசவிக்கும். ஆரோக்கியமான குழந்தை பிறப்பதே அழகுதானே.
எந்த நோய்நொடியும் இல்லாமல் அடுத்த தலைமுறை பிறக்க வேண்டும் என்பதுதானே தாய்மார்களின் பிராத்தனை. அந்த பிராத்தனையை குங்குமப்பூ
நிறைவேற்றி தரும்.
பொதுவாகவே அனைவருமே குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனால் ரத்தத்தில் இருக்கும் நச்சு நீர் வெளியேறும். அலர்ஜி நீங்கும், நன்றாக பசி எடுக்கும், உடல் வலிமை பெறும்.!