குழந்தைகளின் பேச்சுத்திறன் ! Print E-mail
Written by Dr. Somash   

குழந்தைகளின் பேச்சுத்திறன் !

அந்தக் காலத்தில் பாட்டிமார்களின் பேச்சு சத்தத்துடன், குழந்தைகளின் விளையாட்டுச் சத்தமும் கலந்து வீடே கலகலவென்று இருக்கும். ஆனால், இன்று மாலையானதும் எல்லா வீடுகளிலும் டி.வி. சத்தம்தான் கேட்கிறது. டி.வி-யைத் தூக்கிப் பரண் மேல் போடுங்கள். வாய் பேசாத மழலையும் வாய் திறக்கும்.நம் உதட்டு அசைவைப் பார்த்துத்தானே குழந்தைகள் பேசக் கற்றுக்கொள்ளும். 'அப்பான்னு சொல்லு’ என்று குழந்தைகளிடம் தாய் சொல்லும்போது, தாயின் உதட்டைப் பார்த்து வாயைக் குவித்து குழந்தை பேச ஆரம்பிக்கும். பேச்சு கொடுக்காமல் பேச்சு வராது.றம் என்ன பிள்ளையோட பேச ஆரம்பிக்க வேண்டியதுதானே?

மூணு மாதக் குழந்தை அ, உ என்று சத்தம் எழுப்பவேண்டும். இதற்கு கூயிங் (Cooing) னு பெயர். அர்த்தமே இருக்காது. முகத்தைப் பார்த்துச் சிரிக்கவேண்டும்... 'என்னடா செல்லம்...’ என்று சொன்னால், சிரித்தபடியே... 'ம்..... ம்...’ என்று சொல்லவேண்டும்.

ஆறு மாதத்தில் வார்த்தைகள் இல்லாத மா, கா,(Monosyllable)என்று ஒலி எழுப்பவேண்டும்.

8-வது மாதத்தில்... கொஞ்சம் வித்தியாசமாக... 'ங்க... த... த...’ என்று சொல்ல வேண்டும்.

9-வது மாதத்தில் மாமா, தாதா (Bi Syllable)  என்று சொல்ல ஆரம்பிக்கும்.

ஒரு வயதில் அம்மா, அத்தை, அப்பா, பாட்டி என்று கூப்பிட வேண்டும்.

ஒன்றரை வயதில் குழந்தைக்கு எட்டு முதல் பத்து வார்த்தைகள் தெரியவேண்டும். இரண்டு வயதில் 'அம்மா மம்மு, அப்பா தண்ணி, அக்கா உச்சா வருது’ போன்று பேச வேண்டும். மூன்றில் இருந்து நான்கு வயதுக்குள் 5, 6 வாக்கியத்தை சேர்த்து பேச தெரியவேண்டும். இதுதான்... குழந்தையின் பேச்சு வளர்ச்சிக்கான நிலைகள்.

ஒன்றரை வயது வரைக்கும் இதுபோல் பேசாமல் போனால், கண்டிப்பாக பேச்சுப் பயிற்சியைத் தந்தே ஆகவேண்டும்.'' எனத் தெளிவான விளக்கம் கொடுத்த டாக்டர் சுமா தொடர்ந்து,

''மூணு மாதத்தில் இருந்தே குழந்தையுடன் பேசுங்கள். வேலைக்குப் போகும் அம்மாக்கள் என்றால், கிடைக்கும் நேரத்தை குழந்தைங்களோடு பேசிப் புரிதலை உண்டுபண்ணுங்கள்.

50 வார்த்தைகளுக்கு குறைவாகவும், இரண்டு சொல் வாக்கியங்கள் ஒன்றுகூட தெரியலைவில்லையென்றாலும் அந்தக் குழந்தைக்கு பேச்சுக் குறைபாடு இருக்கலாம். பொதுவாக இரண்டு வயதில் அதிகமாகக் காணப்படுகிற இந்தக் குறைபாடு 3, 4 வயதாகும்போதுதான் மெதுவாகக் குணமாகத் தொடங்கும்.

இந்தக் குறையைப் போக்க குழந்தைகள் வாழும் சூழ்நிலையில் பேச்சு சூழல் அதிகமாக இருப்பது போல்  பார்த்துக் கொள்ள வேண்டும். வார்த்தைகளை எப்படி உச்சரிக்கவேண்டும், வாக்கியமாக எப்படிப் பேசவேண்டும் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்தால் குழந்தைகளின் பேச்சு வளர்ச்சி நிச்சயம் அதிகரிக்கும்.