குறட்டையை தவிர்க்க என்ன வழி ? Print E-mail
Written by Dr. Somash   

குறட்டையை தவிர்க்க என்ன வழி ?
சுவாசமானது மூக்கு - வாய் - தொண்டை - மூச்சுக் குழாய் வழியாக நுரையீரலைச் சென்றடைகிறது. இந்தப் பாதையில் எங்கேனும் அடைப்பு ஏற்படும்போது, குறட்டைச் சத்தம் எழுகிறது .மல்லாக்கப் படுத்துத் தூங்கும்போது தளர்வு நிலையில் உள்ள நாக்கும் வாய்ப் பகுதியில் இருந்து சிறிது உள்வாங்கி தொண்டைப் பகுதிக்குள் இறங்கி நிற்கும். இதனாலும், மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டு குறட்டை வரும். இதுபோன்ற தளர்வுச் செயல்பாடுகளால் மூச்சுக் குழல்களில் எந்த அளவுக்கு அடைப்பு ஏற்படுகிறதோ... அந்த அளவுக்கு குறட்டைச் சத்தமும் அதிகரித்துக்கொண்டே போகும்.குழந்தையில் ஆரம்பித்து பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் குறட்டை வரலாம். சளியுடன் கூடிய மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு, டான்சில் எனப்படும் தொண்டைச் சதை வளர்ச்சி, பற்களில் கிருமி, தைராய்டு பாதிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு தூக்கத்தின்போது குறட்டைச் சத்தம் வரும்.  ஆனால், இவை எல்லாம் பயப்படும் அளவுக்கான குறட்டைத் தொல்லை இல்லை. ஏனெனில், மேற்கண்ட பிரச்னைகளுக்கான சிகிச்சையை எடுத்துக்கொண்டு குணமாக்கிவிட்டால், குறட்டையும் 'குட் பை’ சொல்லிக் கிளம்பிவிடும். ஆனால், அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு குறட்டைத் தொல்லை என்பது தவிர்க்க முடியாத 'போனஸ்’ தொல்லை.குறட்டைத் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் மல்லாக்கப்படுப்பதைத் தவிர்த்து, ஒரு பக்கமாக ஒருக்களித்துப் படுத்தால் குறட்டையின் அளவு குறையும். காபி, டீ போன்ற பானங்கள் அருந்துவதைக் குறைத்துக்கொள்வதும் குறட்டைப் பாதிப்பில் இருந்து விடுபடுவதற்கான சிறந்த வழி. அசிடிட்டி மற்றும் வாயுத் தொல்லையால் அவதிப்படுவோருக்கு எளிதில், குறட்டைத் தொல்லையும் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே, பிரச்னைகளுக்குத் தகுந்த சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் காரத்துக்கு குட் பை  சொல்ல வேண்டும்!