You should know!!! Print E-mail
Written by Dr. Somash   

ளிமையாக இருப்பதாலேயே பல அற்புதமான விஷயங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. இதில் கீரை முதன்மையானது. 'ரத்த விருத்திக்கு இரும்புச் சத்து, மலச் சிக்கலைப் போக்க நார்ச் சத்து, கண்களைப் பாதுகாக்க பீட்டா கரோட்டின், கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலிக் அமிலம், தசைச் செயல்பாடுகளுக்கும் - உடல் சீராக இயங்குவதற்கும் தாது உப்புக்கள், எலும்புகளை உறுதியாக்க கால்சியம்’ என விதவிதமான சத்துக்களின் களஞ்சியமாக விளங்குபவை கீரைகள்!

''தினமும் ஒவ்வொரு வகையான கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால், உடலுக்குத் தேவையான அத்தனை சத்துக்களும் கிடைத்துவிடும். பொதுவாகக் கீரை வகைகளில் கலோரியும் புரதமும் மிகக் குறைவாகவே இருக்கும். இதனால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாகக் கீரை சாப்பிடலாம். முதியவர்கள், கர்ப்பிணிகள், வளரும் குழந்தைகள் கீரையை அன்றாட உணவுப் பட்டியலில் சேர்த்துக்கொள்வது அவசியம். பொதுவாக உடல்ரீதியான பிரச்னை இருப்பவர்கள், உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். நார்ச் சத்து நிறைந்து இருப்பதால் கீரையைச் சாப்பிட்டவுடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இரும்புச் சத்து உடலில் சேர வேண்டும் எனில், வைட்டமின் சி வேண்டும். எல்லாக் கீரைகளிலுமே வைட்டமின் சி இருக்கும். ஆனால், கீரையை அதிக நேரம் வேகவைப்பதால் வைட்டமின் சி ஆவியாகிவிடும். எனவே, வேகவைத்த கீரை நன்றாக ஆறிய பின், அதில் எலுமிச்சம் பழச்சாற்றைப் பிழிந்தால், கீரையில் உள்ள இரும்புச்சத்தை நம்மால் கிரகித்துக்கொள்ள முடியும். பயிர் செய்யப்படும் விளை நிலங்களைப் பொறுத்து, கீரையின் சத்துக்களும் ருசியும் சிறிது மாறுபடும். கீரையை ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.