பூண்டின் மகிமை....... Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, நல்லபல தகவல்களை திரட்டி, தொகுத்து , பதிவுசெய்யும் வரிசையில் இன்று பூண்டு பற்றிய மருத்துவக் குறிப்புஒன்றை பார்த்து பலன் அடைவோம்.

மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். அல்சைமருக்கான வாய்ப்பைக் குறைக்கும்.
ஆன்டிபாக்டீரியல், ஆன்டிஃபங்கலாகச் செயல்படுகிறது.

புற்றுநோய்க்கான வாய்ப்பைக் குறைக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வாழ்நாளை அதிகரிக்கிறது.

கெட்ட கொழுப்பு, டிரைகிளிசரைட் அளவைக் குறைத்து, நல்ல கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்கிறது.

விஷப் பூச்சிக்கடிக்கு மருந்தாகிறது.

மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைத்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள்வைக்க உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்துகிறது.

சளி, ஃப்ளு பாதிப்பைக் குறைக்கிறது.

-சஞ்சிகை ஒன்றிலிருந்து: தகவல்  தொகுப்பு: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.