கொத்தமல்லியில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பு .......................... Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, மருத்துவக் குறிப்பு ஒன்றை அறிந்து கொள்வோம்.

கொத்தமல்லியில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் உற்பத்திக்கு உதவுகின்றன. மேலும், செரிமானத்தைத் தூண்டி, அதன் இயக்கம் ஆரோக்கியமாக இருக்கச்செய்கிறது. கொத்தமல்லியைத் தொடர்ந்து சாப்பிட்டுவருபவர்களுக்கு செரிமானப் பிரச்னை பெரும் அளவுக்குக் குறைந்திருப்பதை ஆய்வுகள் உறுதிசெய்துள்ளன. வாந்தி, குமட்டலைப் போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலைப் போக்குகிறது.

செரிமானத்துக்கு உதவும் என்சைம்கள் சுரப்பதைத் தூண்டுவதைப்போல, இன்சுலின் சுரப்பையும் கொத்தமல்லி தூண்டுகிறது. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் வருகிறது. எனவே, சர்க்கரை நோயைத் தவிர்க்க விரும்புகிறவர்கள், சர்க்கரை நோயாளிகள் கொத்தமல்லியைத் தினமும் சேர்த்துக்கொள்ளலாம். - சஞ்சிகை ஒன்றில்இருந்து: