இல்லக விளக்கது இருள் கெடுப்பது.......... Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, மனிதனின் வாழ்க்கையில் விளக்குஏற்றுதல் என்ற விடயம் எவ்வளவு அத்தியாவசியம் என்பதை பாருங்கள்:

''''இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதியுள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நம சிவாயவே''''

என்று திருநாவுக்கரசர் அருளிய நமசிவாய பதிகம் ‘நம சிவாய’ நாமத்தை விளக்குகின்றது. விளக்கு ஏற்றி வைத்தவுடன் புற இருள் அகலும். எங்கும் ஒளி பரவும். ‘நம சிவாய’ எனும் பஞ்சாட்சரத்தை ஓதினால் அக இருள் மறையும். ஞான ஒளி உண்டாகும். புற இருளைப் போக்குவதும் விளக்கு அஞ்ஞான இருளைப் போக்குவதும் ‘நம சிவாய’ எனும் விளக்குதான். இதனாலேயே அஞ்ஞானத்தைப் போக்குதலை ‘விளக்குதல்’ என்றும் கூறுவர்.

இருளை அகற்றி மங்களத்தை உண்டு செய்வதால் அத்தனை விழாக்களிலும், விசேஷங்களிலும் விளக்கேற்றுவது முதலாக நடைபெறும் மங்கள வைபவமாக அமைகின்றது.--தகவல் தொகுத்தவர்: பஞ்சாட்சரன் சுவாமிநாத சர்மா.