சோறு கண்ட இடம் சொர்க்கம் Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பார்கள். ஏன் அப்படி சொல்லி வைத்தார்கள்.? தெரிந்து கொள்வோமே.

ஒவ்வொரு அரிசியிலும் சாப்பிடுபவர்களின் பெயர் இருக்கும் என்பார்கள். சிவபெருமானுக்கு அன்னாபிஷேகத்தில் நாம் சமர்பிக்கும் அரிசி சாதத்தில் நமது பெயரும் இணைந்திருப்பதால், அந்த அபிஷேக அன்னத்தை சாப்பிடும் நமக்கு கோடி புண்ணியங்கள் சேருகிறது. சொர்க்கம்போல அந்தஸ்தான வாழ்க்கை நமது அடுத்த தலைமுறைக்கும் கிடைக்கும்.

அதனால்தான் சொல்வார்கள், “சோறு கண்ட இடம் சொர்கம்” என்று.

அதாவது, சிவபெருமானை அலங்கரிக்கும் அன்னாபிஷேக சோறை கண்டாலே சொர்க்கம்தான்.”

அத்துடன் அந்த அன்னத்தை பிரசாதமாக சாப்பிடுவதற்கு நாம் எத்தனையோ பாக்கியம் செய்திருக்க வேண்டும்.