சாதம் பிரசாதம் ஆவது எப்படி...? Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, அறிவோம் தெளிவோம்!

சாதம் பிரசாதம் ஆவது எப்படி...?

உறவினர் வீட்டுக்கு போனால் எங்கள் சொந்தகாரரை பார்த்துவிட்டு வருகிறோம் என்கிறார்கள்

ஆனால் ஆலயம் சென்று வந்தால் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருகிறோம் என்று சொல்கிறார்கள்...

அது எப்படி மனிதனை பார்த்தால் வெறும் பார்வை என்றும் சுவாமியை கண்டால் தரிசனம் என்றும் ஒரே செயலை இரு வார்த்தைகளில் அழைக்கிறோம்?

உண்மையில் தரிசனம் என்பது என்ன? கோபுரத்தையோ, கொடி மரத்தையோ அல்லது வேறு தெய்வீக பொருட்களையோ தூரத்திலிருந்து காண்பது கூட எப்படி தரிசனமாகும் என்று பலருக்கு குழப்பம் வரும்

அரிசியை கழுவி பாணையில் இட்டு வேக வைத்தால் அது சாதம் தான்.அதில் என்ன புனிதத்தன்மை வந்து திடீர் என பிரசாதம் ஆகிவிடுகிறது?

கடவுளுக்கு மனபூர்வமாக அர்பணிக்கும் போது சாதாரண குழாங்கல் கூட சாளக்கிராம கல்லாகி விடுகிறது அது போல சாதாரண சாதமும் அன்போடு படைக்கும் போது பிரசாதமாகி விடுகிறது

ஒரு பொருளை வெறும் கண்ணால் பார்ப்பது திருஷ்டி மட்டும் தான். அதையே பக்திபூர்வமாக பார்ப்பது தரிசனமாகும்.: prepared by Panchadcharan Swaminathasarma