இது திருமந்திரம்:.... Print E-mail
Written by Dr. Somash   

இது திருமந்திரம்:....

''செம்புபொன் னாக்குஞ் சிவாய நமவென்னிற்
செம்புபொன் னாகத் திரண்டது சிற்பரஞ்
செம்புபொன் னாகும் ஸ்ரீயுங் கிரீயுமெனச் 
செம்புபொன் னான திருவம் பலமே''.

இப்பாடலில் திருமூலர் சிவாயநம என்று செபிக்க செம்பு பொன்னாகும் என்று சொல்கிறார். அதாவது சிவாயநம என்று சிவ சிந்தனையில் இருப்பவர்களால் செம்பினைத்தங்கமாக மாற்ற இயலும் என்கிறார். இறைசிந்தனை தவிர மனத்தில் வேறெதுவும் இல்லாமல் சிவசிந்தனையில் சிவாயநம சிவாயநம என சிந்தித்து இருப்பவர்கள் செம்பை பொன்னாக்க முடியும் என்கிறார்.

இங்கே செம்பு பொன்னாகுதல் என்றால் என்ன என்பதையும் சற்று சிந்திப்போம். செம்பு என்பது களிம்பு உண்டாகும் உலோகமாகும். களிம்பு உருவாகாத அளவுக்கு செம்பினை சுத்திப்படுத்திவிட்டால் அது தங்கமாக ஆகிவிடும்.இப்பாடலில் வெளிப்படையாக செம்பைப் பொன்னாக்குதல் என்னும் (உலோக) இரசவாதம் தெரிகிறது. அதே சமயம் இப்பாடலில் மறைபொருளாக உள்ள ஓர் உயரிய இரகசியம் என்னவென்றால் செம்புபோல களிம்பேறி நோய்நொடிக்கு உள்ளாகி பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிடும் உடம்பினை தங்கமாக்கி, இறவா நிலைக்கு, பேரின்ப நிலைக்கு உயர்த்துவது சிவாயநம எனும் சிவ பஞ்சாட்சரமே என்பதாகும். prepared by Panchadcharan Swaminathasarma