இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை Print E-mail
Written by Dr. Somash   

அறிந்து கொள்வோம் நண்பர்களே!

இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று திட்டவட்டமாக வரையறுக்கிறது.

இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும். மூன்று முக்கியம்:… வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழி செய்பவை மூறு வழிபாடுகளாகும். அவை: குலகுரு வழிபாடு , குல தெய்வ வழிபாடு , குல முன்னோர் வழிபாடு.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும். அடுத்தது குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும். மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும். அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூரவேண்டும். :: prepared by Panchadcharan swaminathasarma