தேங்காய்எண்ணையின் மகிமை Print E-mail
Written by Dr. Somash   

நண்பர்களே, இன்று நாம் பதிவுசெய்த தேங்காய்எண்ணையின் மகிமை பற்றி ஆயுர்வேத டாக்டர் ரெபேக்கா அவர்களின் கட்டுரைதொடர்கிறது:

அதீத வெப்பம் காரணமாக, சருமத்தில் கறுப்புத் திட்டுகள் அதிகமாக உருவாகும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், இது தடுக்கப்படும். இயற்கையாகக் கிடைக்கக்கூடிய, அனைவரும் பயன்படுத்தக்கூடிய, எந்தவிதப் பக்கவிளைவுகளும் இல்லாத சன் ஸ்க்ரீன், தேங்காய் எண்ணெய்.

*தேங்காய் எண்ணெய் மூளை சிறப்பாகச் செயல்பட உதவும். அல்சைமர் போன்ற ஞாபகமறதி பிரச்னைகளைத் தடுக்கும். தைராய்டு பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றையும் தடுக்கும்.*தோலில் ஏற்பட்டுள்ள தழும்புகள் மறைய, தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. கை, கால் மூட்டுகளில் பலருக்கும் கறுப்பு நிறத்தில் அடர்ந்தத் திட்டுகள் இருக்கும். இவர்கள், தொடர்ந்து தேங்காய் எண்ணெயை அந்தப் பகுதியில் பயன்படுத்திவந்தால், பிரச்னை சரியாகும்.

*சருமத்தின் தரம், பொலிவு என இரண்டுக்கும் தேங்காய் எண்ணெய் துணைபுரிகிறது. தேங்காய் எண்ணெயை வெளியே தேய்ப்பதால் மட்டும் அல்ல, உணவு மூலமாக உள்ளுக்கு எடுத்துக்கொள்வதாலும் சருமம் பொலிவுபெறும். இது ஆன்டிபாக்டீரியா தன்மை கொண்டிருப்பதால், கிருமித்தொற்றைத் தவிர்த்து, சிராய்ப்புக் காயங்களை ஆற்றும்.

*தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்பு, பெண்களின் அடி வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்புகளைக் கரைக்க உதவும்.